மக்களவைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்களிப்பது குறித்தான குழப்பத்துக்கு தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை மக்களவை தேர்தல் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில், வாக்களிக்க ஏதுவாக அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
வாக்காளர்கள் குழப்பம்:
இதர பகுதிகளில் உள்ள வாக்காளர்கள், ஜனநாயக கடமையை நிறைவேற்ற சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அது என்னவென்றால், கைகளில் மருதாணி வைத்திருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற தகவல்தான்.
அதற்கு கூறப்படும் காரணம் என்னவென்றால், வாக்களித்த பின்பு, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்காளர்களின் கை விரலில் மை வைப்பது வழக்கம். இது, வாக்கு அளித்ததற்கு அடையாளமாக கருதப்படும். இதன் காரணத்தால், கைகளில் உள்ள மருதாணியானது, மை போன்று காட்சி தரும் என்பதால், வாக்களிக்க வாக்காளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்ற தகவல் பரவி வருகிறது.
இதற்கு பலரும், பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றன. இதனால், வாக்காளர்கள் பெரும் குழப்பத்துக்கு உள்ளானார்கள்.
தேர்தல் ஆணையம் விளக்கம்:
இந்நிலையில், இந்த தகவலானது தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு சென்றது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்தல் ஆணையமானது, சமூக வலைதளங்களில் சில வதந்தி பரவி வருகிறது. அதை யாரும் நம்ப வேண்டாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என தெரிவித்துள்ளது. மெகந்தி - மருதாணி வைத்தால் வாக்களிக்க முடியாது என்பது வதந்தி என விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், மெகந்தி-மருதாணி வைத்தவர்கள் வாக்களிப்பது குறிப்பது குழப்பமடைய வேண்டாம், உங்களது வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் சென்று, வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து ஜனநாயக உரிமையை நிறைவேற்றி விட்டு வாருங்கள்.
Also Read: தேனி: குதிரை மூலம் மலை கிராமங்களுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பப்பட்டது