வேட்புமனுத்தாக்கல் கடைசி நாளான இன்று பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மூன்று உள்ளாட்சி அமைப்புகளில் இந்த வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இறுதி நாளான இன்றும் வேட்பாளர்கள் பலர்,  சுவாரஸ்யமாக வந்து வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இன்னும் சில இடங்களில் வேட்பாளர்களே வித்தியாசமாக இருந்தனர். 


அப்படி ஒருவர் தான், மயிலாடுதுறை நகராட்சியில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள மூதாட்டி ஒருவர். 75 வயதான அவர் பெயர், சொர்ணாம்பாள். தள்ளாத வயதிலும் பொதுமக்களுக்கு சேவையற்ற களமிறங்கியுள்ள சொர்ணாம்பாளை, நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக அலைத்து வந்து, உற்சாகமாக வேட்புமனுத்தாக்கல் செய்ய வைத்தனர். மயிலாடுதுறை நகராட்சி 17 வத வார்டில் கடுமையான போட்டி நிலவும் நிலையில், அந்த போட்டியில் தன்னையும் இணைத்துள்ளார் சொர்ணாம்பாள். 




நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயிகள் சின்னத்தை தெரிவிக்கும் விதமாக, கையில் கரும்போடு வந்த சொர்ணாம்பாள்,  வேட்புமனுத்தாக்கலுடன் பிரச்சாரத்தை தொடங்கினார். வேட்புமனுத்தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சொர்ணாம்பாள், ‛‛மக்களுக்கு சேவை செய்வதற்காக இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன். சேவைக்கு வயது தடையில்லை. என் மீது நம்பிக்கை வைத்து நாம் தமிழர் கட்சி எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. வார்டு மக்களிடம் உள்ள செல்வாக்கையும், என் மீதான நம்பிக்கையை காப்பாற்றி இந்த தேர்தலில் வெற்றி பெறுவேன்,’’ என்று கூறினார். 


இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 23 வார்டுகளில் நாம் தமிழர் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 


வயதை கடந்து பொதுமக்களுக்கு சேவையற்ற களமிறங்கியுள்ள மூதாட்டி வேட்பாளரை, அப்பகுதியினர் வியப்பாக பார்த்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, சக போட்டியாளர்களும், இவருக்கு எப்படி டஃப் கொடுப்பது என்று ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. வார்டில் செல்வாக்கு பெற்றவதாக இருப்பதால், பெண்கள் வாக்குகளை இவர் கவர்வார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். 


வேட்புமனுத்தாக்கல் இறுதிநாளான இன்று வந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ள சொர்ணாம்பாள் பாட்டி, பட்டி தொட்டி எல்லாம் தற்போது பேமஸ் ஆகிவிட்டார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண