குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக பாஜக கூட்டணி சார்பில் மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி ராதாகிருஷணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தல் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நடைப்பெற உள்ளது
குடியரசு துணைத்தலைவர் தேர்தல்:
தேர்தல் ஆணையம் குடியரசு துணைத்தலைவர் தேர்தலை அறிவித்ததிலிருந்து, துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் குறித்து பாஜக மற்றும் பாஜக தனது வேட்பாளரின் பெயரை இறுதி செய்ய கடந்த சில நாட்களாக மும்முரமாக ஈடுப்பட்டு வந்தது. இதற்காக பாஜக வேட்பாளர்களில் டெல்லி லெப்டினன்ட் கவர்னர் வி.கே. சக்சேனா மற்றும் பீகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் ஆகியோரின் பெயர்கள் பரிசிலனையில் இருந்து
குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத், கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட், சிக்கிம் ஆளுநர் ஓம் மாத்தூர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா, மகாராஷ்டிர ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் ஆகியோரும் குடியரசு துணைத்தலைவர் பதவிக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என்று பேச்சுகள் அடிப்பட்டது.
சி.பி ராதாகிருஷ்ணன் தேர்வு:
இந்த நிலையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி ராதாகிருஷணன் போட்டியிடுவார் என பாஜக தலைவர் ஜே.பி நட்டா அறிவித்துள்ளார்.தேர்வு செய்யப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக உள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த சிபி ராதகிருஷ்ணன் 1998 ஆம் ஆண்டு கோவை மக்களவை தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் 2003-2006 ஆண்டு தமிழக பாஜக தலைவராகவும் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகவும் பணியாற்றி இருந்தார்.
பிரதமர் மோடி பதிவு:
சி.பி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் பொது வாழ்வில் நீண்ட ஆண்டுகள், திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் ஜி தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறன் ஆகியவற்றால் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். அவர் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் அடிமட்டத்தில் அவர் விரிவான பணிகளைச் செய்துள்ளார். எங்கள் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அவரை பரிந்துரைக்க என்.டி.ஏ குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜக்தீப் தன்கர் ராஜினாமா:
முன்னதாக, துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஜூலை 21 அன்று உடல்நலக் காரணங்களைக் கூறி பதவியை ராஜினாமா செய்தார். தன்கர் ராஜினாமா செய்த பிறகு, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது, மேலும் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நீண்ட விவாதம் வெடித்தது.
இருப்பினும், தன்கர் ராஜினாமா செய்த பிறகு, பாஜக எச்சரிக்கையுடன் முன்னேறி வருகிறது, ஏனெனில் கடந்த ஒரு வருடமாக கட்சிக்கும் முன்னாள் துணைத் தலைவருக்கும் இடையே எழுந்த சர்ச்சை பாஜக மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. துணைத் தலைவருக்கு அதிக அதிகாரம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் மாநிலங்களவை நடவடிக்கைகளைக் கண்காணித்து அது தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கு அவர் பொறுப்பும் உள்ளது.