உதயநிதி ஸ்டாலின் தொகுதி மறுவரையரை பற்றி படித்து தெரிந்து கொள்ள வேண்டும், கண்மூடித்தனமாக முதல்வரை பின் தொடரக்கூடாது - குஷ்பூ.

குஷ்பூ பேட்டி
 
 மதுரையில் பாஜக நிர்வாகி குஷ்பூ பேட்டி அளித்தார்..," கடந்த 5 ஆண்டுகளாக தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகம் நடந்து வருகிறது. திமுக ஆட்சியில் வீட்டுக்குள் புகுந்து பெண்களை மீது தாக்குதல் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது 8000 ஆயிரம் ரூபாய் கூப்பன் கொடுப்பதை தட்டிக் கேட்க பெண் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். திமுக வினர் எந்த முகத்தை வைத்துகொண்டு வாக்கு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. தமிழகம் எதை நோக்கி செல்கிறது என்று தெரியவில்லை.
 
முதல்வர் தான் வெற்றி பெற்றால் மட்டும் போதும் என நினைக்கிறார்.
 
தந்தை ஸ்தானத்தில் இருப்பதாக சொல்லும் முதல்வர், ஒரு பெண் பாதிக்கப்பட்டால் கேள்வி கேட்காமல் உள்ளார். முதல்வர் தான் வெற்றி பெற்றால் மட்டும் போதும் என நினைக்கிறார். ஒரு கேள்வியை கேட்டால் அதை திசை திருப்ப வேறொரு பிரச்னையை உருவாக்குவார்கள். முதல்வர் பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கவில்லை. அவருக்கு பதிலும் தெரியாது. திமுக மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளது. தொகுதி மறுவரை என்பது தமிழ்நாட்டில் மட்டும் நடைமுறைபடுத்துவதில்லை, இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தும் ஒன்று. தொகுதி மறுவரையால் பெண்கள் முன்னேறுவார்கள் என்பதால் தான் திமுகவினர் அதை எதிர்க்கிறார்கள். உதயநிதி கண்மூடித்தனமாக உங்கள் அப்பாவை பின் தொடராதீர்கள். SIR கொண்டு வந்த போதும் இப்படிதான் பேசினார், இப்போது தொகுதி மறுவரையரை கொண்டு வந்த போதும் இப்படி தான் பேசுகிறார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் நாட்டின் நலனுக்காகவும் தான் டீ லிமிடேஷன் கொண்டுவரப்பட்டுள்ளது. 
 
நாட்டில் மற்ற எந்த மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்ற கேள்விக்கு
 
நான் மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கவில்லை. தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று கூறுகிறேன் முதலில் என் வீட்டில் உள்ள அழுக்கை நான் துடைக்க வேண்டும்" என்றார்.