மக்களவைக்கான தேர்தல் நிறைவுபெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் நிலைமை எப்படி இருக்கிறது என்பது குறித்து, பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன் என்பது குறித்து பார்ப்போம்.

இந்திய நாட்டின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றது. 

மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலானது, ஏழு கட்டங்களாக நடைபெற்ற நிலையில், மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் என்ன தெரிவிக்கின்றன என்பதை பார்ப்போம்.

பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள்:

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், எந்த கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது குறித்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் மூலம் பார்ப்போம். பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் வெற்றி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து கணிப்பு நிறுவனங்கள் பாஜக கூட்டணி  இந்தியா கூட்டணி மற்றவை 
ABP - C Voter 353 முதல் 383 வரை 152 முதல் 183 வரை 4 முதல் 12 வரை
INDIA TODAY( Axis MyIndia) 361 முதல் 401 வரை 131 முதல் 166 வரை 8 முதல் 20 வரை
Republic 353 முதல் 368 வரை  118 முதல் 133 வரை 43 முதல் 48 வரை
JAN KI BAAT 362 முதல் 392 வரை 141 முதல் 161 வரை 10 முதல் 20 வரை
News 18 350 முதல் 370 வரை 125 முதல் 140 வரை 42 முதல் 52 வரை

 542  ( மொத்தம் 543 , சூரத் தொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது ) தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக இன்று வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலை தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

ஏபிபி - சி வோட்டர் எடுத்த கருத்துக்கணிப்பின்படி, மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 353 முதல் 383 தொகுதிகள் வரை பாஜக கூட்டணி வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியானது, 152 முதல் 183 தொகுதிகள் வரை வெல்லும் என ஏபிபி - சி வோட்டர் கணித்துள்ளது. இந்நிலையில் மேற்கூறிய அனைத்து நிறுவனங்களின் கருத்துக் கணிப்புகளை ஆராய்ந்து பார்க்கையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Also Read: Exit Poll Result 2024: தென்னிந்தியாவில் கெத்து காட்டும் பாஜக! கருத்துக்கணிப்பு முடிவால் தொண்டர்கள் குஷி! இதோ விவரம்!