18வது மக்களவைத் தேர்தல் நாளை தொடங்கி அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டமாக நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளில் 102 தொகுதிகளுக்கு முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் மிகவும் முக்கியமாக தமிழ்நாட்டிற்கு முதற்கட்ட தேர்தலில் வாக்குபதிவு மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் நடைபெறவுள்ளது. 


நாளை அதாவது ஏப்ரல் 19ஆம் தேதியில் காலை 7 மணி முதல் மாலை 6  மணி வரை வாக்குபதிவு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 39 தொகுதிகளுக்கும் நேற்று மாலையோடு பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், 39 தொகுதிகளுக்கும் பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சஹூ அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனும் நோக்கில், கர்ப்பமாக உள்ள பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதை எளிமையாக்கிட, 1950 என்ற எண்ணிற்கு அழைத்தால் அவர்கள் வாக்களிக்க வாகனம் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனை பயன்படுத்தி முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பமாக உள்ள பெண்கள் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கருதிகின்றது. 


தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகளுக்கு 63 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.