நடிகர் சூர்யா, உதயநிதி உள்ளிட்ட பலரையும் கோயம்புத்தூர் பாஜக வேட்பாளர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ போவாரா? அவர் ரோடு ஷோ போனால் எத்தனை பேர் வருவார்கள். பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் ரோடு ஷோ நடத்தலாமே. எவ்வளவு பேர் வருவார்கள் என பார்க்கலாமே. மக்களை பட்டியில் அடைத்து வைத்து கூட்டம் நடத்துவது போல் நடத்துகிறார்கள். பிரதமர் மோடி நடத்தியது ரோடு ஷோ இல்லை. மக்கள் தரிசன யாத்திரை. நான் ஒருபோதும் செய்தியாளர்களை பேட்டிக்காக அழைப்பதில்லை. தமிழ்நாட்டில் தீய சக்திகளை அகற்றுவதே மோடியின் கேரண்டி. வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கவில்லை.
சமூக நீதி படம் எடுத்துவிட்டு மும்பையில் போய் உட்காந்து கொள்வார்கள். சும்மா நடிப்பார்களா? பணம். எல்லாம் பணம். உதயநிதி ஒரு குழந்தைக்கு பெயர் வைக்கிறார். அந்த பெயர் என்ன தெரியுமா? ரோலக்ஸ். விக்ரம் படத்தில் போதை பொருள் விற்பவரின் பெயரை குழந்தைக்கு வைக்கிறார்.
வாக்கு எண்ணிக்கை நாளான 2024 ஜூன் 4ஆம் தேதி கொங்கு மண்டலம் யாருடையது என்பதை பார்க்கலாம். ஜி என்று சொன்னால் தீயவர்கள் என்ற பிம்பத்தை உருவாக்குகின்றனர்.
ஊழல் பல்கலைக்கழகத்திற்கு பெயரை ஸ்டாலின் என்று வைத்தால் அதில் வேந்தராக மோடி இருப்பார். பல்கலைக்கழகங்களில் நடக்கும் பிரச்சனைகளை வேந்தர்கள்தான் வெளிக்கொண்டு வருவார்கள். வடக்கில் இருந்தால் கெட்டவர்கள் போலவும், தெற்கில் இருந்தால் நல்லவர்கள் போலவும் படங்களில் காட்டப்படுகிறார்கள். ” எனத் தெரிவித்தார்
கூட்டங்களில் அதிமுகவை பிரதமர் மோடி ஏன் விமர்சிப்பதில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, “ கோவையில் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில், எடப்பாடி பழனிசானி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அ.தி.மு.க. குறித்து விமர்சிக்கவில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த ”பா.ஜ.க.வுக்கு திமுதான் போட்டி என்பதால் அவர்களை தான் விமிர்சிக்க முடியும்" என தெரிவித்தார்.