மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையில் இதுவரை எண்ணப்பட்ட  சுற்றுகளின்  முடிவிலும் காங்கிரஸ் வேட்பாளர் சுதா முன்னிலை வகித்து வருகிறார்.


நாடாளுமன்ற தேர்தல் 


இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஜுன் 4 -ம் தேதியான இன்று பதிவான வாக்குகள் எண்ணப்பட உள்ளது. இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் கடந்த மாதம் மார்ச் 27 அன்று வரை நடைபெற்றதில் 30 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அதில் வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 28 -ம் தேதி அன்று நடைபெற்றது. அதன்படி 17 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது, மீதம் உள்ள 13 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து களத்தில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.


தொகுதி விபரம்


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160-சீர்காழி (தனி) , 161 - மயிலாடுதுறை , 162- பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170- திருவிடைமருதூர் (தனி), 171 - கும்பகோணம் மற்றும்  172-பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில்  1,22,727 ஆண் வாக்காளர்களும், 1,25,660 பெண் வாக்காளர்களும், 11 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,611 ஆண் வாக்காளர்களும், 1,18,948 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 1,33,264 ஆண் வாக்காளர்களும், 1,37,454 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,763 ஆண் வாக்காளர்களும், 1,32,931 பெண் வாக்காளர்களும் , 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,30,162 ஆண் வாக்காளர்களும், 1,37,298 பெண் வாக்காளர்களும் , 15 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,27,410 ஆண் வாக்காளர்களும், 1,33,268 பெண் வாக்காளர்களும், 21 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர்.


பதிவான வாக்குகள்


160. சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 86,100 ஆண் வாக்காளர்களும், 91,815 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் என மொத்தம் 1,77,919 வாக்குகள் பதிவாகின.



161. மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 80,308 ஆண் வாக்காளர்களும், 82,542 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 1,62,852 வாக்குகள் பதிவாகின. 


162. பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 93,162 ஆண் வாக்காளர்களும், 1,00,872 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 1 பேரும் என மொத்தம் 1,94,035 வாக்குகள் பதிவாகின. 



170. திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 89,873 ஆண் வாக்காளர்களும், 94,858 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 3 பேரும் என மொத்தம் 1,84,734 வாக்குகள் பதிவாகின. 



171. கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 89,058 ஆண் வாக்காளர்களும், 92,808 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 2 பேரும் என மொத்தம் 1,81,868 வாக்குகள் பதிவாகின. 



172. பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 87,028 ஆண் வாக்காளர்களும், 94,798 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 9 பேரும் என மொத்தம் 1,81,835 வாக்குகள் பதிவாகின. 
  


வாக்கு எண்ணும் மேசைகள் விவபரம் மற்றும் சுற்றுகள்


ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேசைகள் வீதம் 84 மேசைகளும், தபால் வாக்கு எண்ணும் அறையில் 7 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுக்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுக்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுக்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுக்களும், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கு 21 சுற்றுக்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதிக்கு 22 சுற்றுக்கள், தபால் வாக்குகளுக்கு 2 சுற்றுக்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.


முன்னிலை வகிக்கும் வேட்பாளர்


இந்நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 11 சுற்று முடிவில் 2,76,347 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். தொடர்ந்து அனைத்து சுற்று முடிவிலும் இவரே முன்னிலை பெற்று வருகிறார். அதிமுக 1,26,228 வாக்குகளும், பா.ம.க 92,862 வாக்குகளும்,  நா.த.க 65404 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 1,50,119 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இது தொடரும் பட்சத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதாவின் வெற்றி உறுதியாகி வருகிறது.