2024 மக்களவை தேர்தலின் 543 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது, இந்த 543 தொகுதிகலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 



தற்போது வெளியான 9 மணி நிலவரப்படி, பாஜக - காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டாபோட்டி நிலவி வருகிறது. 


மக்களவை தேர்தல் இரண்டாம் சுற்று நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 315 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 207 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகள் 21 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 


 


கருத்துக்கணிப்பு:  எந்தெந்த மாநிலங்களில் என்னென்ன வெளியானது..? 


நாடு முழுவதும் இந்தி பேசும் மாநிலங்களான உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் பாரதிய ஜனதா கட்சியே வெற்றிபெறும் என கணிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இந்தி பேசும் மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி 90 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டது. மத்திய பிரதேசத்தில் வெளியான கருத்து கணிப்புகளின்படி, 29 இல் 28 இடங்களில் பா.ஜ.க.வும்., ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 இடங்களில் 23 இடங்கள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தன.