திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து 1993 ஆம் ஆண்டு வைகோ உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6ஆம் நாள், சென்னை தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு புதிய அமைப்பின் கொடி கொள்கை குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்து, வெளியிட்டது. அந்த காலகட்டத்தில் காலத்தில் திமுக என்ற மிகப்பெரிய திராவிடக்கட்சியின் போர்வாளாய், பிரச்சாரப்பீரங்கியாய் தளபதியாய் கருணாநிதியின் அன்புத்தம்பியாய் விளங்கியவர்தான் வை.கோபால்சாமி என்ற வைகோ'. எப்படி அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி கட்சியை கைப்பற்றிய நிலையில், திமுக தனது வாரிசுகளுக்கே சொந்தம் என்ற நிலையை உருவாக்கியதுதான் திமுகவை விட்டு வைகோ வெளியேறியதற்கான காரணம் என கூறப்பட்டது.




அவர் வெளியேற மற்றொரு காரணமும் உண்டு அது விடுதலைப் புலிகளுடன் வைகோவிற்கு தொடர்பு உண்டு என்பது. கட்சிக்குச் சொல்லாமல் வைகோ யாழ்ப்பாணத்திற்கு ரகசிய பயணத்தை மேற்கொண்ட விவகாரம் திமுகவுக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலரிடமிருந்து திமுக தலைவர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் விடுதலைப் புலிகளால் அவரது உயிருக்கு ஆபத்து வரலாம் என மத்திய அரசுக்கு தகவல் தெரிய வந்திருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க முதலமைச்சர் கூறியிருப்பதாக அந்த கடிதம் தெரிவித்தது. இந்தச் செய்தியை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கருணாநிதி. இதையடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட வைகோ, மத்திய அரசின் உளவுத் துறையினர் திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த கடந்த சில மாதங்களாக முயன்று வருவதாக தலைவர் கருணாநிதி பலமுறை கூறியிருப்பதை நினைவுகூர்கிறேன். என்னால் திமுக தலைவர் கலைஞருக்கோ கட்சிக்கோ கடுகளவும் கேடுவராமல் தடுக்க என்னைப் பலியிடத்தான் வேண்டுமென்றால் அதற்கும் நான் சித்தமாகவே இருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். அவருக்கு ஆதரவாக திமுகவில் ஒரு பிரிவினர் திரள ஆரம்பித்தனர். இதன் உச்சகட்டமாக வைகோவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார் பொதுச் செயலாளர் க. அன்பழகன். முடிவில் 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் வைகோ. அவருடன் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பிரிந்து சென்றனர்.


வைகோவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினார்கள். வைகோவை கட்சியில் இருந்து நீக்க எதிர்ப்பு தெரிவித்து நொச்சிபட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், உப்பிலியாபுரம் வீரப்பன், கோவை மேலப்பாளையம் ஜஹாங்கீர் ஆகியோர் தீக்குளித்து மாண்டனர். திமுகவின் 9 மாவட்டச் செயலாளர்களும், 400-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோவுக்கு ஆதரவாகக் கிளம்ப வைகோவுடன் சேர்த்து, அவர்களையும் திமுக தலைமை நீக்கியது. தனது வாரிசு அரியணை ஏறுவதில் முட்டுக்கட்டை இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் எம்ஜிஆர், வைகோ போன்ற ஆளுமைகளை திமுகவிலிருந்து கட்டம் கட்டினார் கருணாநிதி என்பது பழைய அரசியலாக கூறப்பட்டது. இதனால் வாரிசு அரசியலை வைகோ கடுமையாக எதிர்த்தார். அது மட்டுமல்ல வாரிசை அதாவது ஸ்டாலினை முதல்வராக விடமாட்டேன் என்று சபதம் எடுத்தார். பின்னர் ஸ்டாலினை முதல்வர் ஆக்குவேன் என்றும் சபதம் எடுத்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்தார்.




மதிமுக தலைமை நிலைய செயலாளராக அவரது மகன் துரை வைகோ வந்தார். கட்சியினர் விருப்பத்தால் மகன் பதவிக்கு வந்தார் என்று காரணம் சொன்னார். இப்படி மாற்றம் கண்டு வந்த மதிமுகவில் அடுத்த மாற்றமும் அரங்கேறியது. திமுக தலைமை அலுவலகமான அறிவாயத்திற்கு வந்த வைகோ முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேசினார். மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் முதல்வர் ஸ்டாலினும் வைகோவும் கையெழுத்திட்டனர். திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மதிமுக ஆட்சி மன்ற குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. வைகோ, பொருளாளர் செந்திலதிபன், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான மதிமுக ஆட்சி மன்ற குழு மற்றும் நிர்வாக குழு கூட்டம் கட்சியின் அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் தலைமையில் கட்சி அலுவலகத்தில் நடந்தது. வைகோ, பொருளாளர் செந்திலதிபன், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருச்சி தொகுதி வேட்பாளர் தேர்வு குறித்து அவைத்தலைவர் அர்ஜுனன் பேசும்போது, நிர்வாகிகள் துரை வைகோ துரை வைகோ என்று சத்தமாக கூறினர். அப்புறம் என்ன அவை தலைவரும் சொல்லி விட்டார் தொண்டர்களும் சொல்லி விட்டார்கள் என துரை வைகோவையே வேட்பாளராக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் வைகோ கூறும் போது, திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் தேர்வு குறித்து கூட்டத்தின் ஆலோசிக்கப்பட்டதில், தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ போட்டியிட செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. நிர்வாக குழுவும் துரை வைகோவின் பெயரை பரிந்துரை செய்தது என்றார்.




வாரிசை அரசியலை காரணம் காட்டி மதிமுக கட்சியை ஆரம்பிப்பதாக வைகோ கூறினாரோ, பின்னாளில் அவரும் வாரிசு அரசியலை முன்னெடுக்க வேண்டிய நிலையை எடுக்க செய்யும் நிலைக்கு ஆளாக்கி விட்டது என்பது தான் அரசியலாகி விட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்