அரவக்குறிச்சியில் உள்ள 253 வாக்குச்சாவடிகளுக்கு 25 கனரக வாகனங்கள் மூலம் வாக்கு இயந்திரங்களை போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேல் நேரில் பார்வையிட்டார்.


 




 


பாராளுமன்ற தேர்தலையொட்டி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள், முதியவர்களுக்கான நாற்காலிகள் உள்ளிட்டவைகளை வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் அதிகாரி, காவல்துறையினர் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.


 




 


வாக்கு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணியை கரூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான தங்கவேல் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


 




அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட 253 வாக்குச்சாவடி மையங்களுக்கு 25 கனரக வாகனங்கள் மூலம் ஒரு வாகனத்திற்கு 10 போலீசார் பாதுகாப்பு பணியுடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்றது.