ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் நேற்று பாஜக கூட்டணியில் சுயேட்சையாக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தாக்கல் செய்தார்.


அதனைத் தொடர்ந்து மதுரை மேளக்கிழார் பட்டி பகுதியைச் சேர்ந்த ஒச்சா தேவர் என்பவரது மகன் பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் புதிதாக மூன்று ஓபிஎஸ் என்று சொல்லக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயருடைய சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.


அதில் ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஒய்யாரம் என்பவரின் மகன் பன்னீர்செல்வம், மதுரை வாகைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒச்சாத்தேவர் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் மதுரை சோலை அழகுபுரம் பகுதியைச் சேர்ந்த ஒய்யாத்தேவர் என்பவரது மகன் பன்னீர்செல்வம் என இன்று ஒரே நாளில் மட்டும் மூன்று ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்தனர்.


மேலும் நேற்று மனு தாக்கல் செய்த மேல்பட்டி ஒச்சா தேவர் மகன் பன்னீர்செல்வம் இன்றும் வருகை தந்திருந்த நிலையில், 'ப்ளீஸ் என்னை வீடியோ எடுக்காதீங்க, 'வீட்டுல நிறைய பிரச்சனை ஆயிடுச்சு' என, செய்தியாளர்களை கெஞ்ச அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த செய்தியாளர்களிடம் திரு திருவென விழித்தவாறே பதில் சொல்ல முடியாமல் திகைத்து நின்றார்.


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூழ்ச்சியாக போட்டியிட மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து அவருக்கு போட்டியாக குழப்பம் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில், ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வங்கள் வந்த வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.