பங்குனி உத்திர தினத்தையொட்டி, நேற்று ஒரு நாளில் மட்டும்  405 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள்னர். 


மக்களவை தேர்தல்:


தமிழ்நாட்டில், முதற்கட்டமாக மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் தேதி தொடங்கி தொடர்ந்து நாடு முழுவதும் ஜூன் 1 -ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 2 மற்றும் ஜூன் 4 -ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.


இந்நிலையில் தேர்தல் தேதி அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.


வேட்புமனு தாக்கல்:


வேட்பு மனுத்தாக்கல் செய்ய தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஞாயிற்று கிழமை வரை சிலரே வேட்பு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக,  நேற்று ஒரே நாளில் மட்டும் 405 வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். நேற்று, பங்குனி உத்திரம் தினம் என்பதால், அதிகமான வேட்பாளர்கள் வேட்புமனுதாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.  நாளையுடன் ( மார்ச் 27 ) வேட்புமனுதாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால் , இன்றும் பெருபாலானோர் வேட்புமனுத் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. 


வேட்பாளர்கள்:


தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் சௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெண் வேட்பாளர் காளியம்மாள் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களுடன் புடைசூழ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.


முன்னதாக நாம் தமிழர் கட்சியினர் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் பெருந்திரளாக கூடி, வேட்பாளர் காளியம்மாவை மாட்டு வண்டியில் அழைத்து இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வித்தியாசமான முறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.


தி.மு.க.வின் கலாநிதி வீராசாமிக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் மனோ களம் இறங்குகிறார். இச்சூழலில், திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய ஒரே நேரத்தில் சென்று, தங்களின் மனுவை தான் முதலில் வாங்க வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டதால் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


தென் சென்னை வேட்பாளர்களான தமிழச்சி தங்கப்பாண்டியனும், தமிழிசை சௌந்தரராஜனும் வேட்புமனுதாக்கல் செய்கையில், ஒருவரையொருவர் கட்டி தழுவி அன்பை பறிமாறி கொண்டனர்.