PM Modi Vellore: பிரதமர் மோடி வேலூர் வருவதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை:
தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகள்லும் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, சென்னையில் ரோட் ஷோவில் ஈடுபட்டார். தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். இந்நிலையில் இன்று அவர், வேலூர் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
பிரதமர் மோடியின் வேலூர் பயணம்:
- இன்று காலை சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்டு தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து வேலூர் சென்றடைகிறார்
- கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில், பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் மற்றும் தருமபுரியில் போட்டியிடும் சவுமியா அன்புமணி ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்
- அங்கிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையம் சென்றடைகிறார்.
- அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
- இறுதியாக கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மகாராஷ்டிராவிற்கு புறப்படுகிறார். அத்துடன் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் நிறைவடைகிறது.
வேலூரில் போக்குவரத்து மாற்றம்:
பிரதமரின் வருகையை ஒட்டி மாவட்டம் முழுவதும் 3,900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. இதுபோக, வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
- குடியாத்தத்தில் இருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் கனரா வாகனங்கள்
குடியாத்தம் , வடுகதாங்கல் , காட்பாடி சித்தூர் பஸ்ஸ்டாப் , EB தட்டு ரோடு ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு பயணிக்கலாம் - திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர் செல்லும் வாகனங்கள் சாத்து மதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு, கந்தேனேரி, பள்ளிக்கொண்டா, குடியாத்தம், பரதராமி வழியாக செல்ல சித்தூர் செல்ல வேண்டும்.
- திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக சென்னை செல்லும் கனரக வாகனங்கள்
சாத்து மதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு ,கந்தேனேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு பயணிக்கலாம். - சித்தூரில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் கனரக வாகனங்கள்
நஹரிப்பேட்டை, EB கூட்ரோடு திருவலம், ராணிப்பேட்டை ஆற்காடு திமிரி ஆரணி வழியாக திருவண்ணாமலை செல்லலாம். - சித்தூரில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் நஹரிப்பேட்டை ,EB கூட்ரோடு திருவலம், ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லலாம்.
- சித்தூரில் இருந்து வேலூர் வழியாக பெங்களூர் செல்லும் கனரக வாகனங்கள்
கிறிஸ்டியன் பேட்டை காட்பாடி குடியாத்தம் ரோடு சந்திப்பு குடியாத்தம் வி கோட்டா வழியாக பெங்களூர் பயணிக்கலாம்.
மேற்கண்ட வழிகளில் பயணிக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் வாகன நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பை அளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.