வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்புமனு தாக்கல் 


தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 20-ந் தேதி தொடங்கி (புதன்கிழமை)  வேட்பு மனுதாக்கல் செய்ய இறுதி நாள் 27-ந் தேதியாகும். வேட்பு மனுக்கள் 28-ந் தேதி ஆய்வு செய்யப்படும். 30-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறலாம். தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம்  அறிவித்து இருந்தது. இந்த நிலையில்  வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 50 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 37 மனுக்கள் ஏற்கப்பட்டது. மீதமிருந்த 13 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. முக்கிய கட்சி வேட்பாளர்கள் திமுகவின் கதிர் ஆனந்தன். பாஜகவின் ஏ.சி. சண்முகம், அதிமுகவின் பசுபதி, நாம் தமிழர் கட்சியின் மகேஷ் ஆனந்த் ஆகியோரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனால் நான்கு முனை போட்டியாக வேலூர் நாடாளுமன்றம் களம் காணுகிறது.




பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம்


இந்த நிலையில் பாஜக வேட்பாளர் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போன்று சண்முகம்,சண்முகவேலு, சண்முகசுந்தரம் என்ற பெயரிலேயே மொத்தமாக 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் 9 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது தெரியவந்திருக்கிறது. பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மனு ஏற்கப்பட்டு இருக்கிறது. அவரை தவிர்த்து பார்க்கும் பொழுது மற்ற அனைவருமே சுழற்சி வேட்பாளராக களத்தில் இறங்கிய உள்ளனர். சத்துவாச்சாரியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவரின் மனு ஏற்கப்பட்டு இருக்கிறது. அடுத்தபடியாக ஏ.சி.சண்முகத்தின் இனிஷியல் மற்றும் பெயரை கொண்ட வாணியம்பாடி அம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.சி‌.சண்முகம் என்பவரும் மனு தாக்கல் செய்திருந்தார். தந்தை பெயர் சென்னப்பன் என குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் மனுவும் ஏற்க பட்டு உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த ஜி.சண்முகம் என்பவர் இரண்டு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஒன்று நிராகரிக்கப்பட்டு இன்னொன்று ஏற்கப்பட்டுள்ளது.




பாஜக வேட்பாளர் பெயரில் 9 பேர் வேட்புமனு தாக்கல் 


அதேபோல் வாணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பி. சண்முகம் வேலூர் அருகே உள்ள திருவாளத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம். வேலூர் சலவன் பேட்டையைச் சேர்ந்த கே.சண்முகம் வேலூர் விருப்பாச்சி புரத்தைச் சேர்ந்த ஜி‌.சண்முகம் வாணியம்பாடி புதூரைச் சேர்ந்த எம். பி. சண்முகம் ஆகியவரின் மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியில் உள்ள சத்துவாச்சாரி பகுதியைச் சேர்ந்த சண்முகவேலு என்பவர் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 25-வது வார்டு திமுக வட்டச் செயலாளராக உள்ளார்.  வேலூரை பொறுத்தவரையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கும் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கும் மிகப்பெரிய போட்டி நிலவுகிறது. இதில் வேலூர் நாடாளுமன்றத்தில் நிலவி வருகிறது. இதில் தேர்தல் களம் பாஜக வேட்பாளர் ஏ.சி‌.சண்முகத்திற்கு சாதகமாக உள்ளதாகவும், இதனால் அவரை வீழ்த்துவதற்காக அவர் பெயரிலேயே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.