நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பிரச்சாரத்திற்காக அடுத்த மாதம் ஐந்தாம் தேதி விழுப்புரம், கடலூர் வேட்பாளர்கள் ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இந்த தேர்தல் பரப்புரை கூட்டம் விழுப்புரம் நகரத்திற்கு உட்பட்ட நகராட்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் நகராட்சி மைதானத்தில் செய்யப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி:
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிடும் ரவிக்குமார் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முக.ஸ்டாலின் அவர்கள் அடுத்த மாதம் ஏப்ரல் ஐந்தாம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவிக்குமார். கடலூர் நாடாளுமன்ற வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோர் அறிமுகம் செய்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். முதல்வர் ஸ்டாலின் கூட்டத்துக்கு லட்சக்காண மக்கள் கூடுகிறார்கள். எனவே இந்த மூன்றாண்டுகளில் செய்துள்ள சாதனைகள் மற்றும் மேலும் செய்ய உள்ள சாதனைகளை கூற உள்ளார்.
விழுப்புரம், கடலூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுகவின் கோட்டையாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகள் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள 400 தொகுதிகளையும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் தமிழகத்தை பொறுத்தவரையில் முதல்வர் ஸ்டாலின் செய்துள்ள சாதனைகள் மற்றும் இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் முதல்வர் ஸ்டாலின் இதற்காகவே தமிழக மக்கள் முதல் ஸ்டாலின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.
கடந்த முறையாவது ஒரு தொகுதியில் தோல்வியுற்றோம் இந்த முறை தமிழ்நாடு 39 மற்றும் புதுவை ஒரு தொகுதி. என 40 தொகுதியிலும் இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெறும். தோழமைக் கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதனால் வெற்றி என்பது மிக மிக உறுதி. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் மற்ற தொகுதிகளையும் விட அதிக வாக்கு வித்தரத்தில் வெற்றி பெறுவதற்கான செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறோம்.
அதிமுக என்ற ஒரு கட்சி இருக்கிறதா என கேள்வி எழுப்பினார். அதிமுக கட்சி ஆறாக உடைந்துள்ளது. திமுகவுடன் போட்டி போடுவதற்கு அதிமுக இல்லை திமுக தற்போது தனி பலமுள்ள கட்சியாக வளர்ந்துள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என உடைந்துள்ளது. எங்களுக்கு போட்டியில் இல்லை என்று தான் நாங்கள் கருதுகிறோம். திமுக எதிர்த்து நிற்கும் கட்சிகள் எல்லாம் எல்லா இடங்களிலும் டெபாசிட் இழப்பார்கள். அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதுதான் இப்போது நடைமுறையில் இருக்கிற உண்மை என்று கூறினார்.