100க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இணைந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டனர். காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு 


காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி


மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரச்சாரத்திற்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திமுக வேட்பாளர் க.செல்வம் 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் வாக்குகளைக் கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.




திமுக வேட்பாளர் செல்வம்


காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாமல், பொன்னியம்மன் பட்டறை, முட்டவாக்கம், மேல் ஒட்டிவாக்கம், பாலு செட்டிச்சத்திரம், திருப்புகுழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பாலுசெட்டி சத்திரத்தில் ஜேசிபி எந்திரத்தில்   50 கிலோ ரோஜா பூக்களை கொட்டி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர்.


 




மேலும், 100க்கும் மேற்பட்ட பெண்கள் இருபுறமும் நின்று கொண்டு, பன்னீர் ரோஜாக்களை தூவி வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கொடிகளுடன் ஊர்வலமாக வந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டனர்.‌


கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரிப்பு


பிரச்சாரத்தின் பொழுது  வடக்கு ஒன்றிய செயலாளர் பி .எம். குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, தாமல், பொன்னியம்மன் பட்டறை , முட்டவாக்கம், பாலு செட்டிச்சத்திரம், திருப்புகுழி , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். எஸ். சுகுமார் ,ஒன்றிய குழு தலைவர் மலர் கொடி குமார், மாவட்ட ஊராட்சி துணை தலைவர் நித்யா சுகுமார் , ஒன்றிய திமுக நிர்வாகிகள் மாரிமுத்து, எஸ்வி ரமேஷ், இளஞ்செழியன், எஸ் எஸ் ஆர் சசிகுமார், மகேந்திரன், வேலுச்சாமி, டி என் ரவி, கருணாகரன், மாவட்ட நிர்வாகிகள் ராம்பிரசாத், தமிழ்செல்வன் ,பி எம் நீலகண்டன்,  காங்கிரஸ் கட்சி சார்பில் துணை மேயர் குமரகுருநாதன்,நாதன், பிச்சாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தி.வ. எழிலரசு பருத்திக்குளம் சேகர், திருமாதாசன், உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.


காஞ்சிபுரம் யாருடைய கோட்டை ?


செங்கல்பட்டு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 4 முறை வெற்றி பெற்றுள்ளது. பாமக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் 2 முறை வெற்றி பெற்றுள்ளன. காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் 


காமன்வீல் கட்சி (1951) ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில், காங்கிரஸ் ஒருமுறையும், அதிமுக ஒரு முறையும் , திமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.


2019 தேர்தல் நிலவரம் எப்படி ?


கடந்த நாடாளுமன்ற தேர்தலில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிமுக சார்பில் அப்பொழுதைய நாடாளுமன்ற உறுப்பினர் மரகத குமரவேல் போட்டியிட்டார். அவர் 3,97,372 ( 333 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் ஜி செல்வம் 6,84,004 (55.27 சதவீதம் ). நாம் தமிழர் வேட்பாளர் சிவரஞ்சினி 62,771 ( 5 சதவீதம் ). இதில் திமுக வேட்பாளரான ஜி. செல்வம், அதிமுக வேட்பாளரான, மரகதம் என்பவரை, 2,86,632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.