தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர் விஜயசீலனை ஆதரித்து திருச்செந்தூரில் பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியா பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொருளாதாரத்தில் வளமையாக இருக்கவும் மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற முருகபெருமானை தரிசனம் செயதேன். தமாக போட்டியிடும் 3 தொகுகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதது. கச்சதீவு பிரச்சனையை பாஜக கொண்டு வருவது அரசியல் என்றால் முதல்வர் இது தொடர்பாக நீதிமன்றம் செல்வது வாக்கு வங்கிக்காகவா?. மேலும் கச்சதீவை பொறுத்தவரை காங்கிரஸ் வரலாற்று பிழை செய்துள்ளது. அதற்கு திமுக அரசு உடந்தையாக உள்ளது. அதன் தாக்கம் இந்த தேர்தலில் மீனவர்கள் மத்தியில் தெரியும். திமுக மீனவர்களிடம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது. திமுக நீலிக்கண்ணீர் வடித்து மீனவர்களை ஏமாற்றுகிறது. மீனவர்கள் ஏமாளிகள் இல்லை. ஒவ்வொரு தேர்தலிலும் திமுக ஆள் பலம், அதிகார பலம், பண பலத்தை வைத்து வெற்றி பெறுகிறது. அவர்கள் பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.
அதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் எஸ்டிஆர். விஜயசீலனை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சைக்கிள் சின்னத்திற்கு வாக்கு கேட்டு திருச்செந்தூர் , உடன்குடி, சாத்தான்குளம் , நாசரேத் மற்றும் ஏரல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டர்.
தொடர்ந்து எஸ்.டி.ஆர். விஜயசீலனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது பேசிய அவர், மத்திய அரசுடன் ஒத்தக்கருத்துள்ள வேட்பாளர்களை ஆதரியுங்கள் என கேட்டுக்கொண்டார். மேலும் மத்திய அரசை திமுக எதிர்க்கட்சியாக பார்க்காமல் எதிரிக்கட்சியாக பார்த்து செயல்படுவதாக விமர்சனம் செய்த அவர் மத்திய அரசை எதிரிக்கட்சியாக பார்க்கும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் தொகுதி பிரச்சனைக ளை தீர்க்க முடியாது என்றும் தொகுதி பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசின் உதவி தேவை என்ரார்.
மேலும் தூத்துக்குடியில் மழை வெள்ள காலங்களில் திமுக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மத்திய அரசு கொடுத்த நிதியை தமிழக அரசு முறையாக கையாலவில்லை எனவும் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் திமுக பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருவதாக விமர்சனம் செய்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செய்துள்ளதாக கூறிய அவர் தமிழக அரசு மகளிர்க்கு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை பாகுபாடு பார்த்து திமுக வினர்க்கு மட்டுமே வழங்குகிறார்கள் என்றார். மேலும் காலையில் வழங்கும் ரூ 1000 மாலையில் அரசின் டாஸ்மாக் கடை கஜானாவிற்கு செல்வதாகவும் குற்றம் சாட்டிய அவர் இதுதான் திராவிட மாடலா எனவும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் மோடி தலைமையில் 3- வது முறையாக ஆட்சி அமைய இருக்கிறது என்றும் இந்தியா பாதுகாப்பான நாடாகவும் , வலிமையான நாடாக இந்தியா இருக்க வேண்டும் எனவே தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர் விஜயசீலனுக்கு சைக்கிள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.