தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வள்ளலார் திடலில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். 

 

இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

 

அதிமுக வேட்பாளராக இருப்பவர், அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர். இந்த தொகுதி ஒரு சவாலான தொகுதி. இதில் அதிமுக வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் சில கட்சியினர் நேரத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப, சந்தேற்கேற்ப கூட்டணி மாறுகிறவர்களாக இருக்கிறார்கள், தருமபுரி தொகுதி அவர்களின் கோட்டையாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் கோட்டையல்ல அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். அதிமுக வேட்பாளர் அசோகனை வெற்றி பெற நீங்கள் எல்லோரும் பாடவேண்டும் என்று பாமகவை கடுமையாக  விமர்சித்து பேசினார். தொடர்ந்து, எறும்பு போல, தேனீக்கள் போல அதிமுக வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். இந்த வெற்றி யாராலும் மறக்க முடியாத வெற்றியாக இருக்க வேண்டும்.  ஏனென்றால் சில கட்சியினர் நேரத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப கூட்டணி மாறுகிறவர்கள். இதனால் தொகுதி அவர்களின் கோட்டையாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது அதிமுகவின் கோட்டை என்பதை நிரீபிக்க வேண்டும். எறும்பு, தேனீக்கள் போல சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். இந்த யாராலும் மறக்க முடியாத வெற்றியாக இருக்க வேண்டும்.



 

கடந்த தேர்தலின் போது, பல அமைப்புகள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்‌.  சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்திரவிட்டது அதிமுக அரசு‌ யாருக்கும், எந்த வகுப்பினருக்கும் பாதிப்பில்லாத வகையில் கணக்கெடுப்பு நடத்த அரசாணை போட்டது அதிமுக. ஆனால் சில பேர் கொள்கை, ஜாதி என்று சொல்கிறார்கள், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார்கள். அதனால் அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும் என தெரிவித்தார்‌. இதில் பாமக, பாஜக பெயரை குறிப்பிடமால் பேசினார் எடப்பாடி. தொடர்ந்து அதிமுக ஆட்சி இருண்ட காலம் காலம் என ஸ்டாலின் தருமபுரியில் பேசினார். பொது மேடை போடுங்கள் விவாதத்திற்கு வாருங்கள். நாங்கள் செய்த திட்டங்களை பட்டியலிடுகிறேன். ஆனால் நீங்க துண்டு சீட்டு இல்லாமல் பேச வேண்டும். கிராமத்தில் சொல்வாங்க, பொய்யை திருப்பி திருப்பி சொன்னால், உண்மை முழிக்குமாம். அதைப்போல பொய்யை பேசுகிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. 

 

திமுக ஆட்சியில் கஞ்சா, மது, போதைப் பொருட்கள் விற்பனை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு நடைபெறுகிறது. இதனால் நம் பிள்ளைகள் போதைக்கு அடிமையாக சீரழிகின்றனர். அதிமுக ஆட்சியில் மடிக்கணினி வழங்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் அது நிறுத்தப்பட்டு, போதப்பொருள் எளிதில் கிடைக்கிறது. சட்டமன்றத்தில் பள்ளிக்கருகில் போதைப் பொருள் இருந்ததாக, 2000 பேர் விற்பனை செய்ததாகவும், 148 பேர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் சொல்லியிருக்கிறார்அப்ப மீதி இருக்கின்றார்கள் கைது செய்யவில்லை. ஏனென்றால் அவர்கள் திமுகவினர்.

 

ஒருவர் கையில் செங்கல்லை எடுத்துக் கொண்டு சுற்றி வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டம் ஜெயலலிதா கோரிக்கை வைத்ததால், பாரத பிரதமர் அப்போது அடிக்கல் நாட்டினார். ஆனால் கட்டுவதற்கு திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் 38 பேர் பேசவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில், தவறு செய்தது‌ திமுக மற்றும் கூட்டணி கட்சிகள். எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல் தூக்கி செல்வது குறித்து கேட்டால், உங்களுக்கு ஏன் வலிக்குது என உதயநிதி கேட்கிறார். வலிப்பது எனக்கில்லை. உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்லுங்கள். எய்ம்ஸ் குறித்து நாடாளுமன்றத்தில் பேச, தில் இல்லை. திராணி இல்லை திமுக வை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி.  காவிரி விவகாரத்தில் ஜெயலலிதா நீதி மன்றம் சென்று உரிய தண்ணீரை திறக்க உத்தரவு வாங்கினார். காவிரி விவகாரத்தின் போது, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையை நடைபெறாமல் தடுத்தனர். தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்று தந்தது அதிமுக.



 

மேட்டூரில் தண்ணீரை திறக்க வந்தபோது, நான் டெல்டாக்காரன் என வீர வசனம் பேசினார் ஸ்டாலின். ஆனால் தண்ணீர் திறந்து 47 நாட்களில் தண்ணீர் இல்லாமல் டெல்டாவில் விவசாய பயிர்கள் காய்ந்து போனது. இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு பெங்களூர் போனார் ஸ்டாலின், அங்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தவில்லை. கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் பொன்னாடை போர்த்து வரவேற்றார் அப்பொழுது தண்ணீர் திறப்பது பற்றி பேசவில்லை. ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. தனது குடும்பத்தில் நலன் முக்கியம். குடும்ப உறுப்பினர் பதவிக்கு வரனும். அதுதான் முக்கியம்.
  

 

மு.க.ஸ்டாலின் இந்தியாவை பாதுகாக்க  வருகிறார்‌ என விளம்பரம் வருகிறது. கிராமத்தில் பழமொழி சொல்வார்கள். உள்ளூரில் கூரை ஏறி கோழி பிடிக்காதவன், வானம் கிழித்து வைகுந்தம் போவான் என்று சொல்வார்கள். அதுப்போல எதிர்கட்சித் தலைவராக இருந்த பெட் சீட் போட்டு உட்கார்ந்து, பெட்டி வைத்து மனுக்களை போடச் சொன்னார். அந்த மனுக்களை படித்தார். திருவண்ணாமலையில் ஒருவர்  மனுவை எடுத்து, பெயரை சொல்லி பேச சொன்னார். (அந்த வீடியோவை போடுங்க மக்கள் பார்க்கட்டும்)

 

இதில் ஒருவர் கறவை மாடு கேட்கிறார். ஆனால் ஸ்டாலின் கணவரை மீட்க மனு கொடுத்ததாக சொல்கிறார். இவர் இந்தியாவை காப்பாற்ற போகிறாராம் என்று திமுக வை தொடர்ந்து விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த கூட்டத்தில் பேச்சு முடியும் வரை, பிரதமர் மோடியை பற்றியோ,  பாஜகவை பற்றியோ வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.