தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தேனி உழவர் சந்தை பகுதியில் நடைபயணமாக சென்று வாக்கு சேகரித்தார். அமைச்சர் ஐ.பெரியசாமி, வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உடன் சிறிய தேனீர் கடையில் அமர்ந்து தேனீர் அருந்தினார்.


தேனி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை தேனி லட்சுமிபுரத்தில் உள்ள திடலில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்காக நேற்று இரவு 9 மணி அளவில் தேனிக்கு வருகை தந்த முதலமைச்சர் பழனி செட்டிபட்டியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் ஓய்வெடுத்தார்.


TN CM MK Stalin: பதில் சொல்லுங்க மோடி! பிரதமருக்கு 18 வாக்குறுதிகளுக்கு கேரண்டி கேட்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!




இதை தொடர்ந்து தனியார் விடுதியில் இருந்து இன்று காலை ஏழு முப்பது மணியளவில்  தேனி பெரியகுளம் சாலையில் உள்ள உழவர் சந்தை நுழைவாயில் இருந்து நடை பயணமாக சென்ற தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் காய்கறி வியாபரம் செய்யும் வியாபாரியிடமும் பொதுமக்களிடையே தங்க தமிழ்ச்செல்வனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிங்கள் என்று பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் முதல்வருடன் செல்பி எடுத்தும் புகைப்படங்கள் எடுத்தும் கை கொடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.


Breaking News LIVE: மயிலாடுதுறையில் சிறுத்தை இல்லையா? - வனத்துறை அளித்த விளக்கம்




Tamil New Year Astrology: 2024 தமிழ் புத்தாண்டுக்கு உச்சம் தொடப்போகும் 6 ராசிகள் எவை? - வாங்க பார்க்கலாம்!


உங்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தேனி பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள தேநீர் கடையில் தமிழக முதலமைச்சர் தேநீர் அருந்தினார். கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மத்தியில் பாரஸ்ட் ரோட்டில் உள்ள சிறிய தேநீர் கடையில் வேட்பாளர் தங்கச்தமிழ்செல்வன், அமைச்சர் ஐ.பெரியசாமி உடன் தேநீர் அருந்தினார். உடன் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.