Lok Sabha Election 2024 : வருகின்ற மக்களவைத் தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக - கூட்டணியில் இருக்கக்கூடிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் செந்தில்நாதன் கடந்த ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு வாக்குறுதிகளை பொதுமக்களிடையே கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும்  தனது தேர்தல் அறிக்கையை வெளியீட்டார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் பேசியதாவது:


இம்மண்ணின் மைந்தன் எனக்கு வாக்களியுங்கள்


கடந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்ததால் மக்கள் தொடர்பு கொள்ள முடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இம்மண்ணின் மைந்தனாக இருக்கும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பிறகு மக்கள் எளிதில் அணுகக் கூடிய வகையில் நாடாளுமன்ற தேதிகளை தவிர்த்து மற்ற செய்திகள் மக்களின் குறைகளை தீர்க்க தொகுதியில் செயல்படுவேன். திருச்சி புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நாடாளுமன்ற பிரதிநிதி அலுவலகம் அமைக்கப்படும். மேலும் வாரத்தின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை அன்று மக்களின் குறைதீர்க்கும் நாளாக ஆறு அலுவலர்களிலும் சுழற்சி முறையில் செயல்படுத்தபடும். 




தகவல் தொழில்நுட்ப பூங்கா


தென் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிய சென்னை மற்றும் பெங்களூர் செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. ஆகையால் சுமார் 10,000 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயனடையும் வகையில் பல மெட்ரோ நகரங்களில் உள்ள மென்பொருள் நிறுவனங்களை முன் மாதிரியாக கொண்டு திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் பெரும் முற்ச் அளவில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மத்திய அரசு ஆதரவோடு அமைக்கப்படும். மேலும் இந்தியாவின் தூய்மை நகரங்களில் பட்டியலில் திருச்சி மாவட்டம் மூன்றாம் இடத்தில் உள்ளது. நான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பிறகு குறைகள் சரி செய்து மூன்றாம் இடத்தில் இருந்து முதலிடத்திற்கு தரம் உயர்த்தப்படும். இதற்கு முழு முதல் காரணமான அதிகாரிகள் சமூகப் பணியாளர்கள் மற்றும் முதல் நிலை அலுவலர்களான தூய்மை பணியாளர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள்.  குறிப்பாக திருச்சியில் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பது இரண்டு மத்திய தொழிற்சாலைகள் மட்டுமே அதன் பிறகு மத்திய அரசின் திட்டத்தின் மூலம் எந்த வித தொழிற்சாலைகளும் கொண்டு வரவில்லை திருச்சி பாராளுமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக திருச்சி மற்றும் கந்தர்வகோட்டையில் மத்திய அரசு தொழிற்சாலைகள் நிறுவப்படும். இதன் மூலம் தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் மேலும் அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும். 




நெடுஞ்சாலைகள் விரிவாக்க திட்டம்


மாநில குற்றப்பிரிவின் அறிக்கைப்படி கடந்த ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலை மூலம் நடக்கும் விபத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே கூறுகளாக இருக்கும் திருச்சி புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலையை விரிவுபடுத்தி பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளடக்கிய நான்கு வழி சாலைகள் தரம் உயர்த்தப்படும். திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மற்ற மாநில மற்றும் அயல் நாட்டிற்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் வகையில் எனது அலுவலகங்களில் புலம் பெயர் தொழிலாளர் நல மையம் அமைக்கப்பெற்று உதவிகள் மேற்கொள்ளப்படும். 


அடிமனை பட்டா பிரச்சனைக்கு தீர்வு..


வெகு காலமாக கிடப்பில் இருக்கும் திருச்சியில் உள்ள திருவரங்கம் அடிமனை பட்டா சிக்கல்கள் முற்றிலும் சரி செய்து மக்களுக்கு பட்டா வழங்கப்படும். இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்தான ரயில்வே துறையில் திருச்சி ரயில்வே நிலையம் தென் மாவட்டங்களையும் வட மாவட்டங்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது. எனவே திருச்சி முதல் பெங்களூர் வரை செல்லும் அதிவேக விரைவு ரயில் கூடுதலாக ஒன்றும், புதுக்கோட்டை - தஞ்சாவூர், புதுக்கோட்டை - பெங்களூர் மற்றும் புதுக்கோட்டை - கோயம்புத்தூர் ஆகிய வழித்தடங்களில் விரைவு ரயில்கள் இயக்கப்படும்.




திருச்சியை இரண்டாம் தலைநகரமாக மாற்ற நடவடிக்கை


புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கனவை நிஜமாக்கும் வகையில் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து சிக்கல்களை கணக்கில் கொண்டும் திருச்சியில் தமிழ்நாட்டின் இரண்டாம் தலைநகரமாக முன்னிறுத்தி அதிகார பகிர்கள் மேற்கொள்ளப்படும். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி புதுக்கோட்டை மற்றும் அமைந்துள்ள சுற்றுலா தளங்கள் அதி நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். 


காவிரி ஆற்று மணலை சுரண்டி பெரும் லாபத்திற்கு கடத்தி இயற்கைக்கு மாறாக செயல்களை சமூகவிரோதிகள் செயல்படுகிறார்கள் எனவே அனைத்து நீர் வளங்களையும் மேம்படுத்தும் வகையில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லார் நீர் நிலைகளிலும் நில அளவு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரி நீர் கொள்ளளவு அதிகரிக்க வழிவகை செய்யப்படும். மணல் கொள்ளையில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.