தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகையும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமாக இருப்பவர் நடிகை குஷ்பு. 


Vote 4 INDIA:


இவர் இன்று சென்னையில் தனது கணவர் சுந்தர்.சியுடன் இணைந்து வாக்களித்தார். வாக்களித்த பிறகு, தனது சமூக வலைதள பக்கத்தில் Vote4INDIA என்று பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பா.ஜ.க.வினர் மற்றும் பா.ஜ.க. கூட்டணியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் விதத்தில் குஷ்பு பதிவிட்டிருப்பது பா.ஜ.க.வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 






அவர் பா.ஜ.க.வில் இணைவதற்கு முன்பு காங்கிரசில் இருந்தார். பா.ஜ.க.வில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், பா.ஜ.க.விற்காக பரப்புரையில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென பாதியிலே பரப்புரையில் இருந்து விலகியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்தியா கூட்டணிக்கு ஆதரவா?


இந்த நிலையில், வோட் 4 இந்தியா என்று பதிவிட்டது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், இந்தியாவிற்காக வாக்களியுங்கள் என்ற நோக்கத்தில்தான் அவ்வாறு பதிவிட்டதாகவும், இந்தியா கூட்டணியை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை என்றும் குஷ்பு விளக்கம் அளித்தார். 


மேலும், அவரது எக்ஸ் தளத்தில் அவரது பெயருக்கு அருகில் மோடி கா பரிவார் என்று பதிவிட்டுள்ளார். மேலும், இந்த தேர்தலில் குஷ்பு பரப்புரையில் ஈடுபடாவிட்டாலும், அவரது கணவர் நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி பா.ஜ.க. கூட்டணியில் இடம்பிடித்துள்ள புதிய நீதிக்கட்சி தலைவரும், வேலூர் தொகுதி வேட்பாளருமான ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டார். 


தற்போது தமிழ்நாடு முழுவதும் வாக்களிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் மிகவும் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால், வாக்களிக்காத வாக்காளர்கள் தங்களது வாக்குகளை விரைந்து சென்று வாக்களித்து வருகின்றனர். மதியம் 3 மணி வரை தமிழ்நாட்டில் 50.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Lok sabha election 2024: திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமக வேட்பாளர் - காரணம் இதுதான்!


மேலும் படிக்க: TN Lok Sabha Election: அந்த நிமிடமே அரசியலை விட்டு விலகுகிறேன்... எதற்காக அண்ணாமலை அப்படி கூறினார்?