மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாவிட்டாலும், நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மீண்டும் ஆட்சியை கைப்பற்றி பா.ஜ.க.வும், பா.ஜ.க.வை அகற்ற வேண்டும் என்ற மும்முரத்தில் இந்தியா கூட்டணியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.


400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் எத்தனை மக்களவைத் தொகுதிகள் உள்ளது? எந்த மாநிலத்தில் எத்தனை தொகுதிகள் உள்ளது? என்பதை கீழே காணலாம்.


மாநிலங்கள்:



  1. ஆந்திர பிரதேசம்  – 25

  2. அருணாச்சல பிரதேசம் - 2

  3. அசாம் - 14

  4. பீகார் - 40

  5. சத்தீஸ்கர் - 11

  6. கோவா - 2

  7. குஜராத் - 26

  8. ஹரியானா - 10

  9. இமாச்சல பிரதேசம் - 4

  10. ஜார்க்கண்ட் - 14

  11. கர்நாடகா - 28

  12. கேரளா - 20

  13. மத்திய பிரதேசம் - 29

  14. மகாராஷ்ட்ரா - 48

  15. மணிப்பூர் - 2

  16. மேகலாயா - 2

  17. மிசோரம் - 1

  18. நாகலாந்து - 1

  19. ஒடிசா - 21

  20. பஞ்சாப் - 13

  21. ராஜஸ்தான் - 25

  22. சிக்கிம் - 1

  23. தமிழ்நாடு - 39

  24. திரிபுரா - 2

  25. தெலங்கானா - 17

  26. உத்தரகாண்ட் - 5

  27. உத்தரபிரதேசம் - 80

  28. மேற்கு வங்காளம் - 42


யூனியன் பிரதேசங்கள்:



  1. அந்தமான் நிகோபர் தீவுகள் - 1

  2. சண்டிகர்                                - 1

  3. தாதர் – நாகர் ஹவேலி  - 1

  4. டெல்லி - 7

  5. டையூ டாமன் - 1

  6. லட்சத்தீவு - 1

  7. பாண்டிச்சேரி               - 1

  8. ஜம்மு காஷ்மீர் - 5

  9. லடாக்   - 1


இந்தியா முழுவதும் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. நாட்டிலே அதிக மக்களவைத் தொகுதிகள் கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. அங்கு 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா 48 தொகுதிகள் உள்ளது. மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளும், பீகாரில் 40 தொகுதிகளும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளும் உள்ளது.


இந்த முறை மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. சார்பில் இந்த முறையும் பிரதமர் வேட்பாளராக பிரதமர் மோடியே களமிறங்குகிறார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியா கூட்டணி சார்பில் இதுவரை பிரதமர் வேட்பாளர் யார்? என்று அறிவிக்கப்படாததும், கூட்டணியில் ஒவ்வொரு கட்சிகளும் விலகுவதும் அந்த கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ராகுல் காந்தி உள்பட அக்கூட்டணியின் தலைவர்கள் கூட்டணியை பலப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைக்க தி.மு.க. பல வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. தி.மு.க. கூட்டணி தரப்பில் கூட்டணி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க, பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க: தேர்தல் அறிவோம்- 2: முதல் சட்டத்துறை அமைச்சர்தான்: ஆனாலும் பால் வியாபாரியிடம் தோற்ற அம்பேத்கர்: நடந்தது என்ன?


மேலும் படிக்க:Chennai Central Lok Sabha Constituency: மத்திய சென்னை மக்களவைத் தொகுதி - எந்த கட்சிக்கு சாதகம்? இதுவரை சாதித்தது யார்? தேர்தல் வரலாறு