மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், மக்களவைத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென்னிந்தியாவில் மிக முக்கியமான மாநிலமாக கருதப்படும் தமிழ்நாடு மக்களவைத் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது.


தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை தொகுதிகள் உள்ளது எனவும், தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதிகள் உள்ளது என்பதையும் கீழே விரிவாக காணலாம்.


தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள் உள்ளது. அதன் பட்டியலை கீழே விரிவாக காணலாம்.



  1. திருவள்ளூர் ( தனி)

  2. வட சென்னை

  3. தென் சென்னை

  4. மத்திய சென்னை

  5. ஸ்ரீபெரும்புதூர்

  6. காஞ்சிபுரம் (தனி)

  7. அரக்கோணம்

  8. வேலூர்

  9. கிருஷ்ணகிரி

  10. தருமபுரி

  11. திருவண்ணாமலை

  12. ஆரணி

  13. விழுப்புரம் (தனி)

  14. கள்ளக்குறிச்சி

  15. சேலம்

  16. நாமக்கல்

  17. ஈரோடு

  18. திருப்பூர்

  19. நீலகிரி ( தனி)

  20. கோயம்புத்தூர்

  21. பொள்ளாச்சி

  22. திண்டுக்கல்

  23. கரூர்

  24. திருச்சி

  25. பெரம்பலூர்

  26. கடலூர்

  27. சிதம்பரம் ( தனி)

  28. மயிலாடுதுறை

  29. நாகப்பட்டினம் ( தனி)

  30. தஞ்சை

  31. சிவகங்கை

  32. மதுரை

  33. தேனி

  34. விருதுநகர்

  35. ராமநாதபுரம்

  36. தூத்துக்குடி

  37. தென்காசி ( தனி)

  38. திருநெல்வேலி

  39. கன்னியாகுமரி


தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 7 தொகுதிகள் தனி தொகுதிகள் ஆகும். பாண்டிச்சேரியில் ஒரு மக்களவைத் தொகுதி உள்ளது. 


தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் கைப்பற்ற தி.மு.க. கூட்டணியும், தி.மு.க. கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சியும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.