நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 388 பதவி இடங்களுக்கு 1790 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தமாக இன்று 7,54,504 பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர், இதற்காக 932 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகராட்சியை பொறுத்தவரை 55 வார்டுகளுக்கு 490 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 319 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகவும், 94 வாக்குச்சாவடிகள் மிக பதட்டமானவையாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 218 வாக்குச் சாவடிகள் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டு வெப் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது. மேலும் தேர்தல் பணியில் 3700 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த சூழலில் காலை 7 மணி முதலே மக்கள் வாக்குசாவடிகளுக்கு வரத் தொடங்கிவிட்டனர், வாக்குசாவடிகளில் அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தம் செய்து கையுறை வழங்கப்பட்டது , பின்னர் முக கவசம் அணிந்து கொரோனா விதிமுறைளுக்கு உட்பட்டு வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 96 நரிக்குறவர் குடும்பங்களைச் சேர்ந்த 168 வாக்காளர்கள் உள்ளனர், இவர்களில் 128 பேர் கடந்த சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் இந்த ஆண்டு முதன்முறையாக 40 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களும் ஆர்வமுடன் வாக்களிக்க உள்ளனர்,
அதே போல நெல்லை உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாஜக மாநிலத் துணை தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் பாளையங்கோட்டை ஜெயேந்திரா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஜன நாயக கடமையை நிறைவேற்றினார், தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, அதிமுக தரப்பிலும், பாஜக தரப்பிலும் பணம் வழங்கப்படவில்லை, நாங்கள் மக்களை நம்பியே தேர்தலை சந்திக்கிறோம், ஆனால் தமிழகம் முழுவதும் ஆளுங்கட்சி தரப்பில் 100% வாக்களர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்துள்ளது என குற்றம் சாட்டினார்,
நெல்லை மாவட்டத்தில் காலை 9 மணி நிலவரப்படி,
பேரூராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் - 15312, பேர், பெண் வாக்காளர்கள் - 12,064 பேர் என மொத்தம் 27,376 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்த நிலையில் 9 மணி நிலவரப்படி 11.55 சதவிகிதமாகவும்,
நகராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் - 6,916 பேர், பெண் வாக்காளர்கள் - 5,593 பேர் என மொத்தம் 12,509 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்த நிலையில் 9 மணி நிலவரப்படி 12.34 சதவிகிதமாகவும்,
மாநகராட்சியில் ஆண் வாக்காளர்கள் - 20,507 பேர், பெண் வாக்காளர்கள் - 14,634 பேர் என மொத்தம் 35,141 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்த நிலையில் 9 மணி நிலவரப்படி 8.34 சதவிகிதமாகவும் உள்ளது, ஒட்டுமொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 9.88 % பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்,
நெல்லை மாவட்டத்தில் காலை 11 மணி நிலவரப்படி,
பேரூராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் - 34,575, பேர், பெண் வாக்காளர்கள் - 33,041 பேர் என மொத்தம் 67,616 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்த நிலையில் 11 மணி நிலவரப்படி 28.54 சதவிகிதமாகவும்,
நகராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் - 14,771 பேர், பெண் வாக்காளர்கள் - 15,463 பேர் என மொத்தம் 30,234 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்த நிலையில் 11 மணி நிலவரப்படி 29.83 சதவிகிதமாகவும்,
மாநகராட்சியில் ஆண் வாக்காளர்கள் - 44,970 பேர், பெண் வாக்காளர்கள் - 38,866 பேர் என மொத்தம் 83,836 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்த நிலையில் 11 மணி நிலவரப்படி 19.91 சதவிகிதமாகவும் உள்ளது, ஒட்டுமொத்தமாக நெல்லை மாவட்டத்தில் 23,92 % பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்து உள்ளனர்,