கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது.  மேயர் பதவி பொது என இருபாலாரும் போட்டியிடும் வகையில் உள்ளது. மேயரை கவுன் சிலர்கள் மறைமுக தேர்தல் மூலமாக தேர்வு செய்ய வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் 26 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. தி.மு.க. காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. தி.மு.க. 37 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி 13 வார்டுகளிலும் மதிமுக 2 வார்டுகளிலும்களிலும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனியாக தேர்தல் களத்தில் உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாம் தமிழர் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 52 வார்டுகளில் தற்போது தேர்தல் களத்தில் 356 பேர் உள்ளனர். 

 


 

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலை யில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் பிரச்சாரம் மேற் கொண்டு உள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள 37 வார்டுகளில் தி.மு.க. அ.தி.மு.க. இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது. 52 வார்டுகளில் 173 பெண்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். ஆண் வேட்பாளர்கள் 183 பேர் போட்டியிடுகிறார்கள். ஏற்கனவே நாகர்கோவில் நகராட்சி நகரமன்ற தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அதில் பாஜக சார்பில் போட்டியிட்டு மீனா தேவ் வெற்றியும் பெற்றுள்ளார் இதற்கிடையே இம்முறை பொது இடமாக மாற்றப்பட்டு இருந்தாலும் கூட ஏராளமான பெண்கள் தேர்தலில் நிற்க போட்டா போட்டி போட்டு கொண்டு வேட்பாளர்களாக களம் கண்டு வருகின்றனர்.

 


 

 நாகர்கோவில் மாநகராட்சி 1-வது வார்டில் 2 பெண் வேட்பாளர்களும், 2 வது வார்டில் ஒருவரும், 3-வது வார்டில் மூன்று பெண்களும், 4-வது வார்டில் ஒருவரும் 6-வது வார்டில் 7 பெண்களும் 7-வது வார்டில் 7 பேரும் 9-வது வார்டில் ஒருவரும் 10-வது வார்டில் 3 பெண்களும் போட்டியிடுகிறார்கள்.  11 -வது வார்டில் 11 பேரும் 13-வது வார்டில் 5 பேரும் 14-வது வார்டில் 4 பேரும் 15-வது வார்டில் 5 பேரும் 17-வது வார்டில் 5 பேரும் 18-வது வார்டில் ஒருவரும் 19-வது வார்டில் 4 பேரும் 20-வது வார்டில் 5 பெண்களும் தேர்தல் களத்தில் உள்ளனர். 21-வது வார்டில் 8 பேரும் 22-வது வார்டில் ஒருவரும் 23-வதுவார்டில் 6 பேரும் 24-வது வார்டில் 5 பேரும் 26-வது வார்டில் 11 பேரும் 28-வார்டில் 6 பேரும் 29-வார்டில் 5 பேரும் போட்டியிடுகிறார்கள்.

 


 

30-வது வார்டில் 7 பேரும் 31-வது வார்டில் 7 பேரும் 32-வது வார்டில் 8 பேரும் 33-வது வார்டில் 4 பேரும் 34 வது வார்டில் ஒருவரும் 35வது வார்டில்3 பேரும் 39-வது வார்டில் 9 பேரும் 40-வது வார்டில் 4 பேரும் 41-வது வார்டில் 5 பேரும் 42-வது வார்டில் 2 பேரும் 44-வது வார்டில் 2 பெண்களும் களத்தில் உள்ளனர். 47-வது வார்டில் 8 பேரும் 48-வது வார்டில் 6 பேரும் 51-வது வார்டில்ஒருவரும் போட்டியிடுகிறார்கள். இதில் 17-வது வார்டில் தி.மு.க. கட்சி சார்பில் 21 வயது இளம்பெண் ஒருவர் வேட்பாளராக தேர்தல் களத்தில் உள்ளார். 16-வது வார்டில் 74 வயது முதியவர் ஒருவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக களமிறங்கியுள்ளார். மேலும் 70 வயதுக்கும் மேற்பட்ட 8 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்.