தஞ்சாவூர் கீழஅலங்கம் மல்லனப்பா சந்து பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். திமுக 15 ஆவது வார்டு பிரதிநிதி. இவர் நேற்று தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் வந்தார்.அவர் திடீரென குடும்பத்துடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள தேசிய கொடிக் கம்பத்தின் அருகே, கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த நிலையில் தற்போது கடந்த 2022 ஜனவரி மாதம் வாக்காளர் பட்டியலில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதால்,

  இதனை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி தர்ணாவில் ஈடுபட அனுமதி கிடையாது. உங்கள் கோரிக்கையை மனுவாக அளியுங்கள் என கூறினர்.




இதனையடுத்து,தஞ்சை மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. மனுவின் மீது உரியவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு,உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் திரு க.சரவணகுமார் உறுதியளித்தார். அவருடன் பெயர் நீக்கம் செய்யப்பட்ட ராஜமாணிக்கத்தின் மனைவி, மற்றும் அவரது மகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன், ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், 15-வார்டு இந்திய கம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளரின் முகவர் சுப்பிரமணியன், ஆகியோர் உடனிருந்தனர்.  




 


 ராஜமாணிக்கம் ஆணையரிடம் கொடுத்துள்ள மனுவில்,நான் தற்காலிகமாக பாலோபநந்தவனத்தில் வசித்து வருகின்றேன். நான் 43 வருடமாக வார்டு எண் 15 ல் வசித்தேன். எனக்கு முதலில் வாக்காளர் அட்டை அந்த முகவரியில் பெறப்பட்டது. மேலும் நான் திமுக கட்சியில் 15 வது வார்டு பிரதிநிதியாகவும் உள்ளேன். என்னுடைய பெயரை எனது உரிமையின்றியும், மறைமுகமாகவும் இணையதளத்தின் மூலமாக வாக்காளர் பட்டியலிருந்து, அதிமுகவை சேர்ந்த சீனிவாசன் நீக்கல் செய்திருக்கின்றார்கள்.  மேலும் எனது மனைவி, மகள் இருவருக்கும் அந்த வார்டில் தான் வாக்கு உரிமம் உள்ளது. நான் வேறு இடத்திற்கு மாறிவிட்டேன் என்று என் வாக்கு உரிமத்தை நீக்கல் செய்துள்ளார்.  ஆனால் எனது மனைவி, மகள் இருவர் வாக்கை நீக்க வில்லை. ஆனால் அவருக்கு கொண்டிராஜபாளையம் வார்டில் வசித்து வருகின்றார்.




 


என் வாக்கு என் உரிமையை அவர் பறித்துள்ளனர். விசாரணை செய்யாமல் என் வாக்கு உரிமத்தை நீக்கல் செய்த மாநகராட்சி ஊழியர்களை விசாரணை செய்ய வேண்டும். இது தொடர்பாக இரண்டு முறை தங்களை சந்தித்துள்ளேன்.  என்னுடைய வாக்கு உரிமத்தை என் அனுமதியின்றி நீக்கியவர் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் நான் மிகவும் மன உளைச்சலில் இருந்து வருகின்றேன். நான் வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும். என் வாக்கு உரிமையை பறித்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கா விட்டால், நான் மரணத்தை சந்திக்க வேண்டிய நிலை வரும் என தெரிவித்துள்ளார்.