கரூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி களுக்கான தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்க உள்ள நிலையில் அதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கரூர் மாநகராட்சி 48 வார்டுகளுக்கு, 191 வாக்கு சாவுடிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நகராட்சியில் 91 இடங்களில், 8 பேரூராட்சிகளில் 124 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு அதற்கான பள்ளிகளில் வாக்குச்சாவடி எண், பாகம் எண் மற்றும் ஆண், பெண் என தனித்தனியாக சுவற்றில் வரையப்பட்டு தேர்தல் பணிகளில் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.


 




கரூர் மாவட்டம் முழுவதும் நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்காக 406 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு வாக்கு பதிவு செய்யும் பெட்டிகள் செல்ல இருப்பதாகவும் அதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுக்கப்பட்டு அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது.


 




கரூர் மாவட்டத்தில் 1மாநகராட்சி, 3 நகராட்சி 8 பேரூராட்சி தேர்தலுக்கான பணிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊழியர்களும் அரசு அதிகாரிகளும் முழுவீச்சில் தங்களது பணிகளை செய்து வருகின்றனர். வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்லும் சாலைகளில் 200 மீட்டர் என வரையப்பட்டு உள்ளது. கரூர் மாவட்டத்தில் 406 இடங்களில் நடைபெறும் வாக்கு பதிவு மக்களுக்கான வாக்கு இயந்திரம் இன்று மதியம் அல்லது மாலை முழுவதும் சென்றடையும் எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் வாக்கு பதிவு செய்யும் மையத்தில் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


 




தமிழகத்தில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெற்ற நிலையில் இன்று கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நாளை நடைபெற உள்ள தேர்தலுக்காக வாக்குச்சாவடி மையங்களில் பணிகள் குறித்து வாக்குச் சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க பல்வேறு விழிப்புணர்வு சுவரொட்டிகளும் வாக்குச்சாவடி மையங்களில் ஒட்டப்பட்டுள்ளது.


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


 




இந்நிலையில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையத்திற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான பொருள்கள் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்றது இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  கரூர் மாவட்டத்தில் நகர்ப்புற  தேர்தலில் 92 வாக்கு சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.  இந்த வாக்குச் சாவடிகள் இணைய தளம் மூலம் நேரடியாக தேர்தல் ஆணையம் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றார்.