கோவைமாவட்டத்தில்நகர்புறஉள்ளாட்சித்தேர்தலைநியாமாகநடத்தவும், பாதுகாப்பிற்குதுணைஇராணுவத்தைவரவழைக்ககோரியும், அதிமுகவினர்மாவட்டஆட்சியர்அலுவலகத்தில்தர்ணாபோராட்டத்தில்ஈடுபட்டுவருகின்றனர். முன்னாள்அமைச்சர்எஸ்.பி.வேலுமணிதலைமையில், பொள்ளாச்சிஜெயராமன்உள்ளிட்டசட்டமன்றஉறுப்பினர்கள்போராட்டம்நடத்திவருகின்றனர். வெளியூர்திமுகவினரைவெளியேற்றக்கோரியும், அதிகாரிகள்திமுகவிற்குசாதகமாகசெயல்படுவதைகண்டித்தும்முழக்கங்களைஎழுப்பினர். இதனையடுத்து கோவைமாவட்ட ஆட்சியர் சமீரன், போராட்டத்தில்ஈடுபட்டஅதிமுகவினரிடம்பேச்சுவார்த்தைநடத்தினார். அதில்உடன்பாடுஏற்படாதநிலையில், அதிமுகவினர்தொடர்ந்துபோராட்டத்தில்ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினர்பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
இதனிடையேமுன்னாள்அமைச்சர்எஸ்.பி. வேலுமணிசெய்தியாளர்களுக்குபேட்டியளித்தார். அப்போதுபேசியஅவர், ”கோவைமாவட்டம்கலவரபூமியாகமாற்றப்பட்டுள்ளது. வெளியூர்குண்டர்கள், ரவுடிகள்2 ஆயிரம்பேரைசிறையில்இருந்துவிடுதலைசெய்து, கோவையில்இறக்கியுள்ளனர். பொதுமக்கள்மற்றும்திமுகவைஎதிர்ப்பவர்கள்அவர்களால்தாக்கப்பட்டுவருகின்றனர்.
புகார்அளிக்கும்அதிமுகவினர்மீதுபொய்வழக்குபோடப்படுகிறது. காவல்துறையினரேவாக்காளர்களுக்குபரிசுப்பொருட்களைவிநியோகம்செய்துவருகின்றனர். விதிமுறைகளைமீறிதிமுகவினர்செயல்படுகின்றனர். கோவையில்பலதேர்தல்கள்நடைபெற்றுஇருந்தாலும், இதுபோன்றதேர்தலைசந்தித்ததுஇல்லை. 20 வருடநிம்மதியைகெடுத்துள்ளனர். எல்லாஊரிலும்ரவுடிகள்உள்ளனர். அதனால்பதட்டமானசூழல்உள்ளது. ஓட்டுபோடவருபவர்களைமிரட்டவும், வாக்குப்பெட்டிகளைதூக்கிச்செல்லவும்திட்டமிட்டுள்ளனர். கோவைகாவல்துறைமீதுநம்பிக்கைஇல்லை.காவல்துறைஅதிகாரிகள்மாற்றம்செய்யப்படவேண்டும். வெளியூர்ரவுடிகள்வெளியேற்றவேண்டும். பாதுகாப்பிற்குதுணைஇராணுவம்வேண்டும்.
கோவைமாவட்டத்தில்உள்ள11 தொகுதியிலும்அதிமுகவெற்றிபெற்றது. அதனால்உதயநிதிஸ்டாலின்மற்றும்அமைச்சர்என்னவேண்டுமானாலும்செய்துஅதிமுகவெற்றியைதடுக்கமுயற்சிக்கிறார்கள். அரசுஇயந்திரத்தைதவறாகபயன்படுத்துகிறார்கள். கோவையில்உள்ளவெளியூர்காரர்களைவெளியேற்றும்வரைபோராட்டம்தொடரும்” எனஅவர்தெரிவித்தார்.
இதையடுத்துபேசியசட்டமன்றஉறுப்பினர்பொள்ளாச்சிஜெயராமன், “கோவைமற்றும்திருப்பூர்மாநகரில்அதிமுகவெற்றிபெறும்என்பதால், திமுகவினர்அராஜகசெயல்களில்ஈடுபட்டுவருகின்றனர். முதலமைச்சர்ஸ்டாலினின்மகன்என்றதகுதியைமட்டுமேகொண்டஉதயநிதிஸ்டாலின்எதிர்கட்சிகொறடாவேலுமணிக்குசாவுமணிஅடிப்போம்எனஅநாகரிகமானஎச்சரிக்கைவிடுத்துள்ளார். திமுகவின்அராஜகசெயல்களுக்குமாவட்டநிர்வாகம்உடந்தையாகஉள்ளது. திமுகவினருக்குஆதரவாகஉள்ளஅதிகாரிகள்தேர்தல்பணியில்இருந்துவிலகவேண்டும். அல்லதுஅந்தஅதிகாரிகள்மாற்றப்பட்டுசட்டவிதிமுறைகளுக்குஉட்பட்டுதேர்தல்நடத்தவேண்டும்” எனஅவர்தெரிவித்தார்.
இதனிடையே அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில், அதிமுகவினர் போராட்டம் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதையடுத்து காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்ய முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் முழக்கங்களை எழுப்பியதால் இரு தரப்பினர் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று காவல் துறையினர் கைது செய்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
