கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.

Continues below advertisement

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், எப்போதும் இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த நாளான இன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி தொடங்கியது. 234  தொகுதிகளில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதன் பிறகு, வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  

மேலும் படிக்க: Tamil Nadu Election Results 2026 LIVE: 110 தொகுதிகளுக்கு மேல் தவெக முன்னிலை.. பரிதாப நிலையில் திமுக!

Continues below advertisement

இதில், கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார். 72,321 வாக்குகள் பெற்ற அவர், 9,116 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 80,838 வாக்குகள் பெற்ற தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றார். முதலமைச்சர் ஸ்டாலினின் தோல்வியால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். முதலமைச்சராக இருந்தபோது பக்தவச்சலம், ஜெயலலிதாவை தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.

ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு

நான்காவது முறையாக கொளத்தூரில் போட்டியிட்ட ஸ்டாலின் சுமார் 9 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். ஸ்டாலினை வீழ்த்திய தவெகவின் வி.எஸ்.பாபு புரசைவாக்கத்தில் திமுக எம்எல்ஏவாக இருந்தார். 2011இல் கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்தான் வி.எஸ்.பாபு. திமுகவின் வடசென்னை மாவட்ட செயலராக பதவி வகித்த இவர், திமுகவில் இருந்து விலகி அதிமுக சென்ற அவர், பின்னர் தவெகவில் இணைந்தார்.

கொளத்தூர் தொகுதி

தவெக வி.எஸ்.பாபு - 82,180

திமுக மு.க.ஸ்டாலின் - 72,988

அதிமுக 18,182

நாதக 4,974