கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னடைவில் இருப்பதாக தகவல்  வெளியாகியுள்ளது. இதனால், திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Continues below advertisement

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில், எப்போதும் இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகி சாதனை படைக்கப்பட்டது. அதன்பிறகு, தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்த நாளான இன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி தொடங்கியது. 234  தொகுதிகளில் பதிவான வாக்குகள் 62 மையங்களில் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதன் பிறகு, வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.  

இதில், கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னடைவில் இருக்கிறார். ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு முன்னணியில் உள்ளார். 

Continues below advertisement

தவெக 66 தொகுதிகளில் முதலிடத்தில், திமுக 48 தொகுதிகளில் இரண்டாம் இடத்திலும், அதிமுக 42 தொகுதிகளில் மூன்றாம் இடத்திலும் இருக்கிறது.

முன்னதாக, சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவில் இருந்தார். தற்போது இருவரும் பின்னடைவில் இருப்பது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.