கரூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 8 பேரூராட்சி உள்ளடக்கிய பகுதியாகும். இந்நிலையில் வருகின்ற 19. 02.2022 ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலை ஒட்டி பரபரப்பாக திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல்வேறு கட்சியினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறும் கடைசி நாளாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி கரூர் நகர்ப்புற தேர்தலில் கரூர் மாநகராட்சி 48-வார்டு பகுதிக்கு 350 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று 75 மனுக்கள் திரும்பப் பெற்றன. அதில் மாநகராட்சி 22வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது கரூர் மாநகராட்சி தேர்தலில் 266 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல் பள்ளப்பட்டி நகராட்சியில் 27 வார்டு பகுதிக்கு 124 நபர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். இதில் 1மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று 29 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இந்நிலையில் பள்ளப்பட்டி நகராட்சியில் தற்போது தேர்தல் களத்தில் 94 நபர்கள் வேட்பாளராக உள்ளனர்.

 

அதேபோல் குளித்தலை நகராட்சி பகுதி 24 வார்டுகள் கொண்டது. இந்த 24 வார்டு பகுதிக்கு 142 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று 36 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. ஆகவே தற்போது குளித்தலை நகராட்சியில் 103 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல் புகழூர் நகராட்சியில் 24 வார்டுகளில் உள்ள நிலையில் 125 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் இன்று 49 மனுக்கள் திரும்பப் பெறப்பட்ட நிலையில் மீதமுள்ள 76 வேட்பாளர்கள் புகழூர் நகராட்சியில் களம் காண்கின்றனர்.

தற்போது கரூர் நகர்ப்புற தேர்தலில் ஒரு மாநகராட்சி 3 நகராட்சிக்கான வேட்பாளர் இறுதி பட்டியலை தற்போது பார்த்துள்ளோம் இதைத்தவிர கரூர் மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளில் வேட்பாளர்களை வளத்தை காணலாம். இதில் குறிப்பாக கரூர் மாநகராட்சி 22வது வார்டு பகுதியில் திமுக வேட்பாளர் பிரேமா மற்ற வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற்ற நிலையில் அவர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு அதைத் தொடர்ந்து இன்று நகராட்சி ஆணையரிடம் தனது வெற்றி சான்றிதழை பெற்று சென்றார்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

தற்போது வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு உள்ளதால் நாளை முதல் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மையம், கொங்குநாடு மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளனர்.