விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ (Beast) படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பியை தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்தது. அதன் படி தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து, சிங்கிள் சாங் ப்ரோமோ வெளியாகியுள்ளது. மேலும் இந்த சாங் வருகிற 14 ஆம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 


அரபிக் குத்து : 


நெல்சனின் இயக்கும் சமீபகால படங்களில் அனிருத் இசையில் புது புதுவகையிலான பாடல்கள் உருவாக்கப்பட்டு அதை வித்தியாசமான முறையில் வெளியிட்டு மிகப்பெரிய ஹிட் அடித்தும் வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது உருவாகி வரும் பீஸ்ட் படத்திற்கும் அரபிக் மற்றும் குத்துப் பாட்டை இணைத்து அரபிக் குத்து என்று தயாரித்து உள்ளனர். 






இந்த பாடல் முழுக்க முழுக்க அரபிக் வரிகளை மையமாக கொண்டு இருக்கும் என்றும், இந்த பாடல் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுத்திலும் தயாரித்து இருக்கின்றனர். நடிகர் விஜய்க்கு இந்த தகவலை சொன்னதும் "அது என்னைய்யா அரபிக் குத்து" என்று ஆச்சர்யப்படும் வகையில் தனது இத்தனை வருட சினிமா அனுபவத்தில் புதுவிதமாக இதை கேட்கிறார். 


சமீப காலமாக, இளம் தலைமுறை இயக்குநர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் சினிமா ரசிகர்களை கவரும் வகையில் புதிய புதிய முயற்சிகளை மிக தைரியமாக மேற்கொண்டு வருகின்றனர். அது தமிழ் சினிமாவை கடந்து உலகம் முழுவதும் மிகவும் வெற்றிகரமாகவும் அமைகிறது. அந்த வகையில்தான் கடைசியாக இவர்களது முயற்சியில் டாக்டர் படத்தில் வெளியான ' கிளாசிக் வெஸ்டர்ன் ' மோடில் ஓ பேபி பாடல். 


கிளாசிக் வெஸ்டர்ன் : 


சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் டாக்டர். இந்த திரைப்படத்திற்கு நெல்சன் இயக்கிருந்தார். இசையமைப்பாளராக அனிருத்தான். டாக்டர் படத்தில் வெளியான செல்லமா மற்றும் ஓ பேபி பாடலுக்கு பாடல் வரிகள் எழுதியது வேறு யாரும் இல்லை சிவகார்த்திகேயன்தான். அதிலும் குறிப்பாக ஓ பேபி பாடலுக்கு இசையமைப்பாளர் அனிருத் வெஸ்டர்ன் மற்றும் கிளாசிக் இணைத்து ஒரு புது விதமான இசையமைத்து அசத்தி இருப்பார். அதிலும் இந்த பாடல் வெளியீடுக்கு முன்பு இவர்கள் செய்த சேட்டைகள் அடங்கிய ப்ரோமோ என்று வெளியாகும் அதை பார்க்கவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் காத்திருக்கிறது. அந்த ஓ பேபி பாடலும் வெளியாகி சினிமா மற்றும் பிரதான ரசிகர்களை கவர்ந்தது. 






மேலும், சிவகார்த்திகேயன், நெல்சன் மற்றும் அனிருத் கூட்டணியில் உருவான கோலமாவு கோகிலா படத்தில் இடம்பெற்ற எனக்கு இப்ப கல்யாண வயசுதான் வந்திருச்சு டி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்