கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இறுதி நாள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நூற்றுக்கணக்கானோர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.


 


 




 


கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் இறுதி நாள் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.  இறுதி நாளான  வேட்பாளர் செந்தில்நாதன் திறந்தவெளி பிரச்சார வாகனத்தில் நின்றபடியும், அவரை பின் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பாஜகவினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக செல்கின்றனர்.


 




கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூரில் தொடங்கிய பிரச்சார பேரணியானது தாந்தோணிமலை, சுங்ககேட், பசுபதிபாளையம், திண்ணப்பா கார்னர், பேருந்து நிலைய ரவுண்டானா வழியாக, திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள தேர்தல் பணிமனையில் நிறைவடைகிறது.


 




 


இறுதி நாள் பிரச்சார பேரணியின் முடிவில் பாஜக அரசின் பத்தாண்டு கால சாதனைகளை விளக்கி வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர பரப்புரை மேற்கொள்கிறார்.