கொளுத்தும் வெயிலில் உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தனர் கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பேரூராட்சியில் உள்ள 15வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு திரட்டும் வகையில் கொளுத்தும் வெயிலில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அங்குள்ள வணிக நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தனர்.
தமிழகத்தில் வரும் 19ந்தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய கட்சிகளின் தலைவர் தமிழகம் முழுவதும் தங்கள் கட்சியினருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரச்சாரத்தினை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பேரூராட்சியில் உள்ள 15வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு திரட்டும் வகையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கழுகுமலையில் உள்ள தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தமால் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வீதி, வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அங்குள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் சாலையோர வியாபாரிகள், பொது மக்களிடம் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஜீப்பில் நின்றபடி ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வாக்கு சேகரித்தனர்.
அப்போது கனிமொழி எம்.பி பேசுகையில் ஆட்சியாக யாருடையதாக இருந்தாலும் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளோம், அதிமுக அமைச்சர்கள் கஜனாவை காலி செய்வதில் மட்டும் தான் அக்கறையாக இருந்தார்கள், வேறு எதையும் செய்ய தயராக இல்லை, குடிநீர் பிரச்சினையை கூட தீர்க்கவில்லை, ஒரு தவறு செய்யும் போது மக்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். அரசுக்கும் மக்களுக்கு பாலமாக இருப்பவர்களுக்குதான் மக்கள் வாக்களிக்க வேண்டும், அது உதயசூரியனுக்காக இருக்க வேண்டும், தேர்தலில்அளித்த வாக்குறுதியின் படி பேரூராட்சியில் 100 நாள் வேலை வழங்குவதற்கான அரசாணை வந்து விட்டது என்றார்.