Voter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை ஃபோனில் பார்த்து உறுதி செய்வது எப்படி என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற மக்களவை தேர்தல்:


பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான, அதிகாரப்பூர்வ தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதுமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  தேர்தலில் வாக்களிப்பது என்பது 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை கடமையாகும். அந்த கடமையை நிறைவேற்ற வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்க வேண்டியது அவசியம். எனவே, வாக்குச்சாவடிக்கு செல்வதற்கு முன்பாக வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா, என்பதை எப்படி உறுதி செய்யலாம் என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. 


வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கா?


இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில், உங்களது பெயர் இருக்கிறதா என்பதை அறிய முதலில், NVSP எனப்படும் தேசிய வாக்காளர் சேவைதளத்தின் https://www.nvsp.in என்ற இணைய முகவரியை அணுக வேண்டும்.  அதில், Search in Electoral roll என்ற பக்கத்தை கிளிக் செய்து உள்ளே நுழையவும். தற்போது மூன்று வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஃபோன் இருந்தாலே, இந்த விவரங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம்.




வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை உறுதி செய்வது எப்படி?


அடிப்படை தகவல்கள் மூலம் உறுதி செய்வது எப்படி?


1. உங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் உங்கள் பெயர் இருக்கிறதா என அறிந்துகொள்ளலாம்.



  • அதன்படி, மாநிலம், பெயர், தந்தை/ கணவரின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், மாவட்டம் மற்றும் தொகுதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்தால், நீங்கள் எந்த பகுதியில் வாக்களிக்க தகுதிபெற்றவர்கள் என்பன உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திரையில் தோன்றும். இதனை ஃபோனிலேயே கூட பார்க்க முடியும்.



2. வாக்காளர் அட்டையில் இருக்கும் உங்களுக்கான EPIC எண்ணை பயன்படுத்தியும், வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை உறுதி செய்துகொள்ளலாம். அதன்படி, 



  • NVSP பக்கத்தில்  Search in Electoral roll என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் திரையில் இரண்டாவதாக, Search by EPIC No என இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

  • பிறகு, அங்குள்ள கட்டத்தில் EPIC எண்ணைப் பதிவுசெய்த பிறகு, மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, கேப்சா கோடை பதிவிட்டு Search பொத்தானை க்ளிக் செய்யவும்.

  • தற்போது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.


3. வாக்காளர் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பயன்படுத்தியும், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்யலாம்.



  • NVSP பக்கத்தில்  Search in Electoral roll என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இப்போது தோன்றும் திரையில் மூன்றாவதாக, Search by Mobile என இருக்கும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

  • பிறகு, அங்குள்ள கட்டத்தில் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, மொ[பைல் எண் மற்றும் கேப்சா கோடை பதிவிட்டு Search பொத்தானை க்ளிக் செய்யவும்.

  • தற்போது உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும்பட்சத்தில், Search பட்டனுக்குக் கீழ் உங்களின் பெயர் காண்பிக்கப்படும்.