மக்களவை தேர்தலுக்காக, தபால் வாக்கு செலுத்தும் முறையில் திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி வாக்களித்தார்.
தபால் வாக்குகள்:
இந்திய நாடாளுமன்றத்துக்கான மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி, ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவானது நடக்கிறது. வாக்குகளானது ஜூன் 2 மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக எண்ணப்படுகிறது.
இதனிடையே நாடாளுமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் வகையிலான வாய்ப்பை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் பிற மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்த பணியானது சென்னையில் இன்று முதல் தொடங்கவுள்ளது.
இதையடுத்து, நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குகள் பெறும் பணியை, முன்னாள் அமைச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ஆற்காடு நா.வீராசாமியிடம் தேர்தல் அதிகாரிகள் வாக்கு சேகரித்தனர்.
இந்நிலையில், 4, 538 பேரிடமும் தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது இன்று முதல் நடைபெற உள்ளது. 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பணியில் மொத்தம் 67 குழுக்கள் ஈடுபடுகிறது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் தபால் வாக்கு சேகரிக்கும் பணியானது வீடு, வீடாக மேற்கொள்ளப்படுகிறது.
தபால் வாக்கு சீட்டினை அதிகாரிகள் வழங்கி, எப்படி வாக்களிப்பது என எடுத்துக்கூறி, பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டு மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவை திரும்ப பெறுவர் என குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி தபால் வாக்கு அளித்ததை, அவரது மகனான திமுக எம்.பி கலாநிதி வீராசாமி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!