✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

OPS: பெரும் பரபரப்பு! சுயேட்சை சின்னத்தில் களத்தில் இறங்கிய ஓபிஎஸ்: எந்த தொகுதி?

செல்வகுமார்   |  22 Mar 2024 12:22 AM (IST)

O Panneerselvam: வரும் மக்களவை தேர்தலில் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்

சுயேட்சை சின்னத்தில் ஓ.பன்னீர்செல்வம் போட்டி

O Panneerselvam: ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

களத்தில் இறங்கிய ஓபிஎஸ்:

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டுக்கு முதல்கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேட்சை சின்னத்தில் ஒரு தொகுதியில் ஓபிஎஸ் போட்டி என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

தமிழ்நாடு பாஜக கூட்டணியில் இணைந்துள்ள ஓபிஎஸ் அணி, எத்தனை தொகுதியில் போட்டியிட உள்ளது, எந்த தொகுதியில் போட்டியிட உள்ளது என கேள்விக்குறியாக இருந்தது. மேலும் பாஜக மற்றும் ஓபிஎஸ் அணியினரிடையே கூட்டணி உடன்பாடு குறித்து பெரும் இழுபறி ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால், சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம். மேலும் அந்த ஒரு தொகுதியான ராமநாதபுரம் தொகுதியில், தொண்டர்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில், நானே களத்தில் இறங்க முடிவு எடுத்துள்ளேன் என்று யாரும் எதிர்பார்க்காத அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

Also Read: Power Pages-11: இரட்டை இலைக்கு எதிராக வாக்கு சேகரித்த எம்.ஜி.ஆர். - காரணம் என்ன?

பலத்தை நிரூபிப்பாரா?:

அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை பெறுவதே இலக்கு என செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் பிரிக்கப்பட்டு விட்டார். அதிமுக கட்சி- சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் சென்று விட்டது. 

அதிமுகவில் இருந்து பிரிந்துள்ள ஓபிஎஸ், கட்சி- சின்னம் கோரி வழக்குகளை தொடர்ந்து நடத்தி வந்தாலும், அவருக்கு பின்னடைவையே சந்தித்து வருகிறார். 

மேலும், ஓபிஎஸ் பாஜக கூட்டணிக்குச் சென்றார், ஆனால் பாஜக கூட்டங்களில் ஓபிஎஸ் அழைக்கப்படாமை, கூட்டணி அறிவிப்பு மேடைகளில் கூட ஓபிஎஸ்-க்கு முக்கியத்துவம் வழங்கவில்லை என பேசுபொருளானது. மேலும், ஓபிஎஸ்-ஐ தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இது ஓபிஎஸ் தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்க்கு தொண்டர்கள் பலம் குறைந்துள்ளது எனவும் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார் ஓ.பன்னீர்செல்வம். என்ன அறிவிப்பை வெளியிட போகிறார். எத்தனை தொகுதி, எந்த சின்னம் என எதிர்பார்ப்பு கிளம்பியது. 

ஆனால், அதிரடியான ட்விஸ்ட்டை வெளியிட்டார்.

” 15 தொகுதிகள் பாஜகவிடம் கேட்டோம்; அவர்களும் தருவதற்கு தயாராக இருந்தார்கள்; ஆனால் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு இருப்பதால் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறோம். இரட்டை இலை என்பதே இலக்கு; இந்நிலையில் தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க, ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்; ராமநாதபுரம் தொகுதியில், நானே போட்டியிடுகிறேன் என யாரும் எதிர்பாராத அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்”.

தனது பலத்தை நிரூபிப்பேன் என ஓபிஎஸ் போட்டியிடவுள்ளதாக எடுத்துள்ள இந்த முடிவானது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரத்தில் திமுக கூட்டணி சார்பாக ஐ.யு.எம்.எல் கட்சியைச் சேர்ந்த நவாஸ் கனி போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக ஜெயபெருமாள் போட்டியிடுகிறார். 

இந்த மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் வென்று தொண்டர்களின் பலத்தை நிரூபிப்பாரா என்பதை தேர்தல் முடிவிலே தெரிய வரும். 

Also Read: Power Pages-10 : பாஜக ஆட்சி கவிழ்ப்பு; சாணக்கியத்தனமாக 4 தொகுதிகளில் வேட்புமனு - ஜெயலலிதாவின் அரசியல் களம்

Published at: 21 Mar 2024 09:07 PM (IST)
Tags: OPS breaking news Abp nadu lok sabha 2024 O Paneerselvam
  • முகப்பு
  • தேர்தல் 2024
  • OPS: பெரும் பரபரப்பு! சுயேட்சை சின்னத்தில் களத்தில் இறங்கிய ஓபிஎஸ்: எந்த தொகுதி?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.