அ.தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எடப்பாடி பழனிசாமி தவழ்ந்து போய்தான் முதல்வர் பதவியைப் பெற்றார் என்று தி.மு.க. கிண்டலடிக்கிறது. தவழ்ந்து போனாலும், உருண்டு போனாலும் தி.மு.க. ஒருபோதும் முதல்வர் பதவியை வேறொருவருக்கு விட்டுத்தராது. தவழ்ந்தும், உருண்டும் போக வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாங்கள் சுயமரியாதைக்காரர்கள் என்று தி.மு.க. சொன்னால், மு.கருணாநிதிக்கு பிறகு மு.க.ஸ்டாலின் உதயநிதி, கனிமொழி, தயாநிதி இவர்களைத் தவிர தி.மு.க.வில் வேறு சுயமரியாதைக்காரர்கள் யாரும் இல்லையா..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.




தமிழ்நாட்டில் வரும் 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு நடைபெறும் இந்த தேர்தலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரடியாகவும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியை ஆளுங்கட்சியான தி.மு.க. கடுமையாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியையும், அவரையும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. ஆட்சி மீதும் அ.தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தி.மு.க. பற்றி வைகைச்செல்வன் கடுமையாக விமர்சித்துள்ளார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண