ஜூன் 4 க்கு பிறகு இபிஎஸ் தலைமையிலான அதிமுக இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில், ஜூன் 4க்கு பிறகு யார் காணாமல் போவார்கள் பார்க்கலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
மக்களவை தேர்தலுக்காக அரியலூரில் அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அப்போது சிதம்பரம் வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர்,
பாஜக கூட்டணியில் இருக்கும் வரை விசுவாசமாக இருந்தோம்; தொண்டர்கள் விரும்பியதால் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். அதிமுகவை சீண்டி பார்க்காதீர்கள், அப்படி பார்த்தால் எப்படி இருக்கும் என தொண்டர்கள் காட்டுவார்கள்.
அதிமுகவை அழிக்க நினைத்த சிலர், இப்போது பழத்தை தூக்கி கொண்டு அலைகின்றனர்.
வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டதால், சிலர் எதை எதையோ உளறி கொண்டிருக்கிறார்கள்.
அதிமுக போராடியதால்தான் திமுக மகளிருக்கு ரூ. 1000 தந்தது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.