✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Lok Sabha 2024:வாக்களிக்கும் நாளில் விடுப்புடன் சம்பளமும் வழங்க அரசு உத்தரவு; தகுதியுடையவர்கள் யார்?

செல்வகுமார்   |  30 Mar 2024 09:46 AM (IST)

Election Holiday With Salary: தேர்தல் நடைபெறும் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தேர்தல் நாளன்று ஊதியத்துடன் விடுமுறை

Election Leave With Salary: மக்களவை தேர்தலில் வாக்களிப்பதை ஊக்கமளிக்கும் வகையில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

மக்களவை தேர்தல்:

இந்திய நாடாளுமன்றத்தின்  18வது மக்களவைக்கான தேர்தல்  ஏழு கட்டங்களாக  நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையானது, சிக்கிம் மற்றும் அருணாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ஜூன் 2 ஆம் தேதியும், இதர மாநிலங்களுக்கு ஜூன் 4 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் தேர்தலானது, முதல் கட்டத்திலேயே வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தும் நோக்கில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்தது தேர்தல் ஆணையம்.

விடுமுறை:

மேலும், அனைவரும் வாக்களிக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், விடுமுறை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு விடுமுறை தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என மாநிலங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியது. 

இந்நிலையில், தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் தெரிவித்ததாவது, வாக்களிக்கும் தினத்தன்று ஏப்ரல் 19-ஆம் தேதி விடுமுறையுடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தது. 

Also Read:Model Code of Conduct: வேட்பாளர்களே ஜாக்கிரதை: அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிமுறைகள்; என்ன செய்யலாம், கூடாது?

யாரெல்லாம் தகுதியுடையவர்கள்:

அரசு பணியாளர்கள்

தனியார் துறையைச் சேர்ந்தவர்கள்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

பிபிஓ

கடைகளில் பணியாற்றும் தினக்கூலிகள்

தற்காலிக பணியாளர்கள்

சொந்த ஊருக்குச் சென்று வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் விடுமுறையுடன் கூடிய ஊதியத்தை வழங்க வேண்டும் என மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் தெரிவிக்கிறது. 

ஆகையால் ஏப்ரல் 19 தேதியன்று, இந்த உத்தரவை நிறுவனங்களின் தலைவர்கள் பின்பற்ற வேண்டும் எனவும், அனைத்து நிறுவனங்களும் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் பின்பற்றும் வகையில் கட்டுப்பாட்டு அறையை தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களாட்சியின் முக்கிய கூறாக வாக்க அளிப்பது உள்ளது.  பலர் மக்களாட்சி செயல்பாடுகளில் பங்கு பெறும்போது, மக்களாட்சி மேலும் வலுவடையும். ஆகையால், அனைவரும் தேர்தல் நாளன்று வாக்களித்து மக்களாட்சி  பண்பை வலுப்படுத்துங்கள். 

Also Read:Constitution of India: அரசியலமைப்பு சட்டம் குறித்து ஏன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்?

Published at: 30 Mar 2024 09:46 AM (IST)
Tags: @election Salary Holiday Lok Sabha 2024
  • முகப்பு
  • தேர்தல் 2024
  • Lok Sabha 2024:வாக்களிக்கும் நாளில் விடுப்புடன் சம்பளமும் வழங்க அரசு உத்தரவு; தகுதியுடையவர்கள் யார்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.