களத்தில் இறங்கும் வேட்பாளர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில், தேர்தல் பணியானது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் வருகிற 30ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படவுள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரத்தை மேற்கொள்ளவுள்ளனர். இந்த நிலையில் பிரச்சாரம் செய்வது, சுவரொட்டி, விளம்பர பலகை வைப்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் படி, மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட தகவலில், 

Continues below advertisement

பிரச்சாரத்திற்கு அனுமதி பெறுவது எப்படி.?

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்கள், பேரணி மற்றும் தெருமுனைக் கூட்ட பிராச்சாரம் நடத்துதல், வாகனங்கள் மற்றும் ஒலிப்பெருக்கி பயன்படுத்துதல், தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல் உள்ளிட்டவற்றிற்கு Suvidha என்ற செயலி மூலம் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம்  விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். இத்தகைய விண்ணப்பங்கள் நிகழ்வு தொடங்குவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பாக அளிக்கப்பட வேண்டும். வீடுவீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்ளுதல், ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபாட் பயன்பாடு, தற்காலிகக் கட்சி அலுவலகம் அமைத்தல், ஒலிபெருக்கியுடன் கூட்டம் நடத்துதல்,

 எதற்கெல்லாம் அனுமதி வாங்க வேண்டும்

ஒலிபெருக்கியுடன் தெருமுனைக் கூட்டம் நடத்துதல், ஒலிபெருக்கியுடன் ஊர்வலம் நடத்துதல், பேரணி நடத்துதல் (Rally), சாலைக் காட்சி (Road Show) மேற்கொள்ளுதல், விளம்பரப் பதாகைகள் மற்றும் கொடிகள் (Display Banner and Flags). சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் மற்றும் கம்பத்துடன் கூடிய விளம்பரப் பலகைகள் வாகனங்கள் (Poster. Hoarding and Unipole), (Vehicle Permission)बां மாவட்டத்திற்குள் (Vehicle Permit (intra District)). ஒலிபெருக்கியுடன் வாகன அனுமதி (Vehicle with Loudspeaker Permit) நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்களுக்கு வாகன அனுமதி (Star campaigners and Party office bearers) உள்ளிட்டவற்றிற்கு Suvidha செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Continues below advertisement

தடையில்லா சான்றிதழ் கட்டாயம்

பெறப்படும் இத்தகைய விண்ணப்பங்கள் காவல்துறை. போக்குவரத்துத் துறை. பொதுப்பணித் துறை. மின்சாரத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளுக்கு கருத்து மற்றும் தடையில்லாச் சான்றுக்காக அனுப்பப்படும்.மேற்குறிப்பிட்ட துறைகளின் கருத்துக்கள் மற்றும் தடையின்மைச் சான்றுகளின் அடிப்படையில், தேர்தல் சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் பரிசீலி கப்பட்டு அனுமதி வழங்கப்படும். மேற்குறிப்பிட்ட துறைகளிடம் இருந்து தடையின்மைச் சான்று கிடைக்காத பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அதற்கான காரணங்களும் தேர்தல் நடத்தும் அலுவலரால் தெரிவிக்கப்படும்.

Suvidha செயலி விண்ணப்பிக்கனும்

இந்த Suvidha செயலி மூலம் இதுவரை 816 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 408 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 134 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும், 274 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளது. எனவே, தேர்தல் விதிகளின்படி Suvidha செயலி மூலம் 48 மணிநேரத்திற்கு முன்னதாக விண்ணப்பங்களை அளித்து, சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அனுமதி பெற்று தேர்தல் நடத்தை விதிகளை தவறாமல் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.மேற்கண்ட தகவலை மாவட்ட தேர்தல் அலுவலர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.