- திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் விவரங்களை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
- ராமநாதபுரம் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியதை கண்டித்து, தங்கச்சிமடம் பகுதியில் அதிமுகவினர் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
- நாதக ஆட்சிக்கு வந்தால், அரசு ஊழியர்கள் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும், அப்படி இல்லையென்றால் சம்பளத்தில் பாதி பிடித்தம் செய்யப்படும் என சீமான் கூறியுள்ளார்.
- நாமக்கல்லில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைத்து ரூ.3.85 ஆக நிர்ணயம்.
- தனது ஏழ்மையை பயன்படுத்தி, பண உதவிகள் செய்து அத்துமீறியதாக, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரான ஞானவேல் பாபு என்பவர் மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து, கிராம் ரூ.245-க்கு விற்பனை.
- பெட்ரோல் டீசலல் மீதான கலால் வரியை தலா 10 ரூபாய் குறைத்து மத்திய அரசு அறிவிப்பு. எண்ணெய் நிறுவனங்களுக்கு உதவவே இந்த நடவடிக்கை என்றும், இதனால் சில்லறை விற்பனை விலை குறையாது எனவும் விளக்கம்.
- குஜராத்தில் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 2,300 கிலோ போதைப்பொருள் மாயமானதாக சிஏஜி அதிர்ச்சித் தகவல். திருடுபோனதாகவும், எலிகள் சாப்பிட்டதாகவும் போலீசார் விளக்கம்.
- கப்பல் போக்குவரத்தில் இந்தியாவின் ராஜதந்திரத்தை பார்த்து மேற்கத்திய நாடுகள் கற்றுக்கொள்ள வேண்டும் என ரிபப்ளிகன்ஸ் ஓவர்சீஸ் இஸ்ரேல் அமைப்பின் தலைவர் மார்க் செல் பாராட்டு.
- ஈரானில் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் திட்டத்தை மேலும 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.
- ஈரான் உடனான போரில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவிற்கு உதவு தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மே மாதம் சீனா செல்வதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சீனா விருப்பம்.
- நிறுவன மறுசீரமைப்பு மற்றும் ஏஐ துறையில் கவனம் செலுத்துவதற்காக, சுமார் 700 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். இதனால், Reality Labs, அட்மின், Facebook ஆகிய பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
