கருணாநிதி உயிருடன் இருந்தபோது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாத கட்சி திமுக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

Continues below advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆலந்தூர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணியில் 25 நாட்களாக தொகுதி பங்கீடு உடன்பாட்டில் இழுபறி நிலவி வருகிறது. வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைப்பது உறுதி. அதிமுக கூட்டணியின் பலத்தை பார்த்து திமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. கருணாநிதி உயிருடன் இருந்தபோது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாத கட்சி திமுக. 10 ஆண்டுக் காலம் திமுகவுடன் இருந்த கட்சிகளுக்கு ஒரு தொகுதி குறைத்துக் கொடுத்திருக்கிறார்கள். புதிதாக வந்த கட்சி அதிக தொகுதிகளை கொடுத்திருக்கிறார்கள். விண்ணைமுட்டும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

 

Continues below advertisement