தமிழ்நாட்டில் நடந்து முடிந்தநகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் திமுகவின் கோரமுகத்தை தெளிவாக வெளிப்படுத்தியது என்று பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம் சாட்டி இருக்கிறார். அதனை தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தார் அண்ணாமலை. ட்விட்டரில் பதிவிட்டு அதிகாரப்பூர்வ இந்திய தேர்தல் ஆணையத்தின் பக்கத்தை டேக் செய்திருந்திருந்தார்.
அந்த புகாரில், “நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் எந்தத் தடங்கலும் இல்லாமல் நடந்து முடிந்ததாக திமுக அரசு கூறி வரும் நிலையில், வாக்குப்பதிவு நாளில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற முறைகேடுகளும் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும் இந்தக் காணொளித் தொகுப்பு காட்டுகிறது! பிப்ரவரி 22-ம் தேதி, வாக்கு எண்ணிக்கை நாளன்று இந்திய தேர்தல் ஆணையம் கண்களை மூடாமல் இருக்கும் என நினைக்கிறேன்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்குமாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் பதிவில், ”கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களை நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உரிமை இல்லை. இவை இந்திய அரசியலமைப்பின் பிரிவு 243 K & 243 ZA இன் கீழ் மாநில தேர்தல் ஆணையங்களால் நடத்தப்படுகின்றன. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை மாநில தேர்தல் ஆணையத்திடம் அளிக்கவும்” என குறிப்ப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்