கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, கொங்கு நாடு மக்கள் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளை திமுக முடித்து விட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.

Continues below advertisement

அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

’’திமுக கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஆக்கிரமிப்பு செய்து விட்டது. விசிக எம்எல்ஏக்களை திமுக எம்எல்ஏக்கள் போல மாற்றிவிட்டனர்.

Continues below advertisement

பத்தாண்டுகளாக திமுக கூட்டணியுடன் பயணிக்கும் விசிகவிற்கு 8 தொகுதி கொடுக்கிறார்கள். நேற்று வந்த தேமுதிகவிற்கு 10 தொகுதி கொடுக்கிறார்கள். இதுதான் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கொடுக்கின்ற மரியாதையா? பிற கட்சிகளுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. 

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திருமா

திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்து கொண்டிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில் திமுக பட்டியல் என மக்களுக்கு செய்த ஏதாவது ஒரு நன்மையை சொல்ல முடியுமா?

பட்டியலின மக்கள் திமுகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?  திமுக ஆட்சியில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் நாங்குநேரி, வேங்கை வயல், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

5 ஆண்டுகளாக செய்தது என்ன?

5 ஆண்டுகளில் ஏதாவது நன்மை செய்திருந்தால் அதைச் சொல்லி திமுக ஓட்டு கேட்கட்டும். ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த திமுக தங்களுடைய சாதனைகளோ, வாக்குறுதிகளோ, கொள்கையோ சொல்லி ஓட்டு கேட்காமல் 8000 ரூபாய் கூப்பன் கொடுப்போம் என்று சொல்லி வாக்கு கேட்கிறார்கள்.. இந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் ஏதாவது நன்மை செய்திருந்தால் அதை சொல்லி வாக்கு கேட்கலாமே?’’

இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.

முன்னதாக பண்ருட்டி தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்,போதை கடத்தல் மன்னன் ஜாஃபர் சாதிக் உடன் தொடர்புடையவர் என்றும் அன்புமணி குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.