கரூர் பெரு நகராட்சியாக இருந்த கரூர் நகராட்சியை மாநகராட்சியாக திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதும் தரம் உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் மாநகராட்சிக்கு முதல் தேர்தலை கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலும் அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.


 




இதே போல 22-வது வார்டு திமுக வேட்பாளர் பிரேமா, அதிமுக வேட்பாளர் வளர்மதி, பாஜக வேட்பாளராக ஜெயலட்சுமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சோழியம்மாள் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் வாபஸ் பெறும் நாளில், வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளரை தவிர மற்ற அனைவரும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதால் போட்டியின்றி பிரேமா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.


 




இதனைத் தொடர்ந்து தனது கணவர் சங்கருடன் மாநகராட்சிக்கு வந்த திமுக வேட்பாளர் பிரேமாவுக்கு மாநகராட்சி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆன ரவிச்சந்திரன் வெற்றி பெற்ற பிரேமாவுக்கு வாழ்த்து தெரிவித்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். இதனைத்தொடர்ந்து ஆனந்த கண்ணீருடன் சான்றிதழை பெற்றுக் கொண்ட பிரேமா ஆணையருக்கு நன்றி தெரிவித்தார்.




 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கவுன்சிலர் பிரேமாவின் கணவர் சங்கர் செய்தியாளரிடம் கூறும்போது-


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அதிகப்படியான வார்டுகளை கரூர் மாநகராட்சியில் ஒதுக்கித் தந்தார். தமிழக மின்சாரத் துறை அமைச்சரும் எனது மனைவிக்கு போட்டியிடும் வாய்ப்பை பெற்றுத் தந்தார். அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேசமயம் வார்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்து பாடுபடுவோம்