சாம்சங் (Samsung) நிறுவனம், தங்களின் அடுத்த Unpacked Event பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்த நிகழ்வில் Samsung Galaxy S22 ஐ அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy S22 உடன், நிறுவனம் Galaxy Tab S8 ஐ அறிமுகப்படுத்தலாம். வெளிவந்துள்ள தற்போதைய தகவல்களின்படி, இந்த மொபைலின் பாடி பிரத்யேக மெட்டீரியலில் உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதாவது பயன்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்ட மீன்பிடிக்கும் வலைகளை சுத்திகரித்து அதன்மூலம் பிளாஸ்டிக் பாடி செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.



சாம்சங் விரைவில், கடலில் கலக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்துவதாக அறிவித்து வந்தது. அதன் முதல் படியாக வரப்போகும் கேலக்சி சீரியஸ் இருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், 9 ஆம் தேதி வெளியாகும் இந்த மொபைலில் இந்த அம்சத்தை எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. ஆனால் இந்த பிளாஸ்டிக்குகள் எங்கு, எந்த பாகத்தில் பயன்படுத்தப்படும் என்ற தெளிவான அறிக்கைகள் இன்னும் வரவில்லை. சாம்சங் அதனை எப்படி மொபைல் கட்டுமானத்தில் பயன்படுத்துவோம் என்று எந்த செய்தியும் தெரிவிக்கவில்லை. ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய ஆணையத்தின் கூற்றுப்படி, வருடத்திற்கு உலகெங்கும், ஆறு லட்சத்து நாற்பதாயிரம் டன் அளவிலான மீன் வலைகள் கடலில் வீசப்பட்டு, கழிவுகளாகின்றன என்று கூறப்படுகிறது. இதனை 'பேய் வலைகள்' என்று குறிப்பிடும் சாம்சங், இது கடல்சார் வாழ்க்கைக்கு மிகவும் பாதிப்பளிக்கும் விதமாக இருப்பதாக தெரிவிக்கிறது.



நாளை மறுநாள் வெளியாக இருக்கும் கேலக்சி எஸ் 22 என்னென்ன வேரியன்ட்களில் வருகின்றன என்று பார்க்கலாம். எஸ் 22 அல்ட்ரா மாடல், 6.8-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2x டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன், நீங்கள் Samsung Galaxy Note போன்ற வடிவமைப்பு மற்றும் S Pen ஸ்டைலஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இதில் நீங்கள் Samsung Exynos 2200 மற்றும் Qualcomm Snapdragon 8 Gen 1 ஆகிய இரண்டு சிப்செட் விருப்பங்களைப் பெறுவீர்கள். இதில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி வரை ஸ்டோரேஜ் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் 108MP வைட் ஆங்கிள் லென்ஸ், 12MP அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் இரண்டு 10MP டெலிஃபோட்டோ லென்ஸ்கள் மற்றும் நல்ல ஆப்டிகல் ஜூம் தரத்துடன் வரும் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வரும்.


இந்தத் Series இன் அடிப்படை மாடலாக வரும் RO மாடல், 6.1-இன்ச் FHD+ AMOLED 2x டிஸ்ப்ளே, 3,700mAh பேட்டரி, 8GB ரேம் மற்றும் 256GB வரை ஸ்டோரேஜ் ஐப் பெறுவீர்கள். Samsung Exynos 2200 அல்லது Qualcomm Snapdragon 8 Gen 1 சிப்செட்டில் வேலை செய்யும் இந்த மொபைலில், 50MP வைட்-ஆங்கிள் லென்ஸ், 12MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 10MP டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இது 10MP முன் கேமராவையும் கொண்டிருக்கும். தற்போது இந்தத் தொடரின் வெளியீட்டிற்குப் பிறகுதான், இதன் விலை எவ்வளவு என்பது தெரியவரும், அதன் பிறகுதான் இந்த அம்சங்கள் அணைத்தும் உறுதிப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.