சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.தமிழ்நாடு உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும்பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டதை தொடர்ந்து, வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.




திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.


 
இதில், திமுக கூட்டணி 148 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் உதயசூரியன் சின்னத்தில் 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 16 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், இடதுசாரி கட்சிகள் தலா 2 இடங்களிலும், தனிச்சின்னத்தில் போட்டியிட்ட விசிக 4 இடங்களிலும் முன்னிலை உள்ளது.
 
இந்நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் சுமார் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின் வெற்றி அடைந்துள்ளார்.
 
தான் சந்தித்த முதல் சட்டப்பேரவை தேர்தலில் உதயநிதி வெற்றியை அறுவடை செய்துள்ளார். அதுவும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளார்.
 
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியைப் பொறுத்தவரை முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியாகும். கடந்த 1996, 2001, 2006 ஆகிய தேர்தல்களிலும் வெற்றிவாகை சூடினார். வாரிசு அரசியல் விமர்சனத்துக்குள் சிக்கி முதன்முதலாக அரசியல் களம் காணும் உதயநிதிக்கு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியே சரியாக இருக்குமென சரியாக கணித்து களம் இறக்கியது திமுக. உதயநிதிக்கு எதிராக பாமக வேட்பாளரை களம் இறக்கியது அதிமுக.  உதயநிதிக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் என கணிக்கப்பட்ட நிலையில் அதனை உண்மையாக்கியுள்ளனர் அந்தத் தொகுதி மக்கள்.