அமைச்சர்கள் பொன்முடி, கயல்விழி செல்வராஜ், ராணிப்பேட்டை காந்தி, மனோ தங்கராஜ் ஆகியோருக்கு இந்த முறை திமுக வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

Continues below advertisement

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 164 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி, 164 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 70 தொகுதிகள் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் 10 தொகுதிகளில் தேமுதிகவும் போட்டி போட உள்ளது.

Continues below advertisement

திமுக வேட்பாளர்கள் அலசல்

திமுக வேட்பாளர்களில் 125 பேர் பட்டம் பெற்றவர்கள் ஆவர். இதில் 18 பேர் மகளிர் ஆவர். முனைவர் 7 பேர், மருத்துவர் 15, பொறியியல் பட்டதாரிகள் 17 பேர் ஆவர். புதுமுகங்கள் 60 பேருக்கு மேல் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எந்தெந்த அமைச்சர்களுக்கு வாய்ப்பு?

செஞ்சி- செஞ்சி மஸ்தான்

காட்பாடி - துரைமுருகன்

திருச்செந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – கீதா ஜீவன்

முதுகுளத்தூர்- ராஜ கண்ணப்பன்

மதுரை மத்தி- பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

மன்னார்குடி – டி.ஆர்.பி.ராஜா

திருவெறும்பூர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி மேற்கு – கே.என்.நேரு

காங்கயம் – மு.பெ.சாமிநாதன்

துறைமுகம் - சேகர்பாபு

குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

திருச்சுழி- தங்கம் தென்னரசு

திருவண்ணாமலை – எ.வ.வேலு

ஆலங்குடி – மெய்யநாதன்

குன்னம் – சிவசங்கர்

சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன்

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி- உதயநிதி ஸ்டாலின்

ஆவடி – நாசர்

அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன்

திருவிடை மருதூர்- கோவி செழியன்

ஈரோடு மேற்கு – முத்துசாமி

ராசிபுரம் – மதிவேந்தன்

திருமயம் – எஸ்.ரகுபதி

ஆத்தூர்- அமைச்சர் ஐ.பெரியசாமி

எனினும் இந்த முறை அமைச்சர்கள் பொன்முடி, கயல்விழி செல்வராஜ், ராணிப்பேட்டை காந்தி, மனோ தங்கராஜ் ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

என்ன காரணம்?

இதற்கு பதிலாக திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடியின் மகன் பொன் கெளதமசிகாமணி போட்டியிடுகிறார். ராணிப்பேட்டை தொகுதி அமைச்சர் காந்தியின் மகன் வினோத் காந்திக்கு அளிக்கப்பட்டுள்ளது.